குராசானி புளி என்பது ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பாவோபாப் மரத்தின் (அடான்சோனியா டிஜிட்டாட்டா) பழமாகும் என்பதுடன் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பு ஆப்கானிய மற்றும் அரேபிய வணிகர்களால் மாண்டு என்ற பகுதிக்கு இது கொண்டு வரப் பட்டதாக நம்பப்படுகிறது.
தெலுங்கானாவின் ஹைதராபாத்தில் உள்ள உஸ்மானியா பல்கலைக்கழகம், இந்திய தர நிர்ணய அமைப்பால் (BIS) வழங்கப்படும் நான்கு சர்வதேச தர நிர்ணய அமைப்பு (ISO) சான்றிதழ்களை ஒரே நேரத்தில் பெற்ற இந்தியாவின் முதல் பல்கலைக்கழகமாக உருவெடுத்துள்ளது.
இந்தச் சான்றிதழ்கள் கல்வி நிர்வாகம், சுற்றுச்சூழல் மேலாண்மை, ஆற்றல் மேலாண்மை மற்றும் உணவுப் பாதுகாப்பு மேலாண்மை அமைப்புகளை உள்ளடக்கியவை.
சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (CPCL) நிறுவனமானது இந்தியாவின் 28வது நவரத்னா மத்திய பொதுத்துறை நிறுவனமாக (CPSE) உருவெடுத்து உள்ளது மற்றும் இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் மணலி (சென்னை) மற்றும் நாகப் பட்டினம் ஆகிய இடங்களில் முக்கியப் பெட்ரோலியச் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கி வருகிறது.
மான்செஸ்டரில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு மகளிர் டி20 உலகக் கோப்பையின் போது, 200 சர்வதேச இருபது ஓவர் (T20I) போட்டிகளில் விளையாடிய உலகின் முதல் கிரிக்கெட் வீரர் (ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில்) என்ற பெருமையை இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பெற்றார்.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பின் (FIH) நேஷன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் ஹாக்கி அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் விண்வெளி முகமைகளின் தலைவர்கள் (HOSA) கூட்டம் ஆனது இந்தியாவின் தலைமையில் பெங்களூருவில் நடைபெற்றது.
பேரிடர் மேலாண்மை மற்றும் பருவநிலை மாற்றக் கண்காணிப்பிற்கான தொலையுணர்வு செயற்கைக் கோள் அமைப்புகள் குறித்து இக்கூட்டம் கவனம் செலுத்தியது.