TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 12 , 2026 3 days 88 0
  • கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த இயற்கை விவசாயி வி.டி. வள்ளுவன், ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் (UN FAO) 'மண் பாதுகாப்பு நாயகன்' (Soil Hero Guardian) போட்டியில் மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
    • பல்நிலை, பல பயிர் மற்றும் மரம் சார்ந்த இயற்கை விவசாய முறைகள் மூலம் மண்ணின் கரிம கார்பன் அளவை 1.56% ஆக உயர்த்தியதற்காக வேண்டி அவர் அங்கீகரிக்கப் பட்டார்.
  • 2026 ஜூலை 6 அன்று, இந்தியாவின் மொத்த மின்சாரத் தேவையின் 50.2%-ஐ தூய்மையான எரிசக்தி ஆதாரங்கள் பூர்த்தி செய்ததுடன் இந்த மைல்கல்லை எட்டுவது இது இரண்டாவது முறையாகும்.
  • நோவோ நோர்டிஸ்க் நிறுவனத்தின் உலகின் முதல் வாரத்திற்கு ஒருமுறை செலுத்தப் படும் அடிப்படை இன்சுலினான அவிக்லியை (இன்சுலின் ஐகோடெக்) இந்தியா அறிமுகப் படுத்தியது.
    • இது, வகை 1 மற்றும் வகை 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்கு ஆண்டுக்கு 365 இல் இருந்து 52 ஆக இன்சுலின் ஊசிகளைக் குறைக்கிறது.
  • வாரணாசி விமான நிலையம், பயன்பாட்டில் உள்ள விமான ஓடுபாதையின் கீழ் இந்தியாவின் முதல் ஆறு வழி சுரங்கப்பாதையைப் பெற உள்ளது என்பதோடு 450 மீட்டர் நீளமுள்ள இந்த அமைப்பு, மேலே விமானச் செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் அதே வேளையில், கீழே சாலைப் போக்குவரத்து இயக்கத்தை சாத்தியம் ஆக்கும்.
  • சர்வதேச நாணய நிதியம் (IMF) ஆனது, பியர்-ஒலிவியர் கோரின்சாஸுக்குப் பதிலாக, இங்கிலாந்து வங்கியின் முன்னாள் கொள்கை வகுப்பாளரான சில்வானா டென்ரேரோவை தனது புதிய தலைமைப் பொருளாதார நிபுணராகவும் பொருளாதார ஆலோசகராகவும் நியமித்துள்ளது.
  • ஜெய்ப்பூர் உலக அளவில் 6வது இடத்தைப் பிடித்ததுடன், 'மகிழ்ச்சியான நகரங்கள் குறியீடு 2026'-இன் முதல் 10 இடங்களில் இடம்பெற்ற ஒரே இந்திய நகரமாகவும் மாறி உள்ளது.
    • இக்குறியீட்டில் லண்டன் (இங்கிலாந்து) முதலிடத்தையும், அதனைத் தொடர்ந்து நியூயார்க் நகரம் (அமெரிக்கா) மற்றும் பாரிஸ் (பிரான்ஸ்) ஆகியவை இடம் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்