இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது (ISRO) ககன்யான் குழுமத் தொகுதி அமைப்புகளின் மூன்று முக்கிய சோதனைகளை வெற்றிகரமாக நடத்தியது.
இந்த சோதனைகள், கடலில் விழுந்த பிறகு குழுமத் தொகுதியை நேராக்குதல், மையப் பகுதி வழிமுறைப் பிரிப்பு மற்றும் உச்சி உறைப் பிரிப்பு உள்ளிட்ட குழுவினரின் பாதுகாப்பு அமைப்புகளில் கவனம் செலுத்தின.
கடந்த 75 ஆண்டுகளில் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 5-வது புதிய குரங்கு இனமான கொலோபஸ் குடும்பத்தைச் சேர்ந்த இதற்கு 'கொலோபஸ் காங்கோயென்சிஸ்' என அறிவியல் பெயரிடப்பட்டுள்ள காங்கோ ஜனநாயகக் குடியரசின் (DRC) மழைக்காடுகளில் 'லிக்வேலி' என்ற புதிய குரங்கு இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேம்பட்ட ஆய்வுகள் நிறுவனமானது (VISTAS), இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு (AI) ஒருங்கிணைக்கப்பட்ட அடுக்குமாடி பல்கலைக்கழக வளாகத்தை சென்னையின் திருவான்மியூரில் திறந்து உள்ளது.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) பரவி வரும் எபோலாவின் பண்டிபுக்யோ (Bundibugyo) வகைக்கு எதிராக உருவாக்கப்பட்ட புதிய எபோலா தடுப்பூசியின் மனிதப் பரிசோதனைகளை ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தொடங்கியுள்ளது.
பெங்களூருவில் உள்ள நானோ மற்றும் மென்மையான பொருள் அறிவியல் மையத்தின் (CeNS) அறிவியலாளர்கள், நச்சு வாயுவை நிகழ்நேரத்தில் கண்டறிவதற்கான அதி-உணர்திறன் கொண்ட அணியக் கூடிய அம்மோனியா உணரியை உருவாக்கியுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகளின் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் சர் கார்பீல்ட் சோபர்ஸ் தனது 89 வயதில் காலமானார்.
ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம், ஆகமன் திட்டத்தின் கீழ் விக்ரம்-1 ஏவுகலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி, புவியின் தாழ் சுற்றுப்பாதையில் (LEO) சரக்குகளை நிலைநிறுத்திய இந்தியாவின் முதல் தனியார் ஏவுகலம் என்ற பெருமையைப் பெற்றது.
நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்காகவும், நீதியை எளிதில் பெறுவதற்காகவும் ஹரியானாவின் குருகிராமில் 'நீதி கோபுரம்' என்ற மாவட்ட நீதிமன்ற வளாகத்தை இந்தியத் தலைமை நீதிபதி (CJI) சூர்ய காந்த் திறந்து வைத்தார்.
இந்தப் புதிய வளாகத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் கீழ் ஒரு சர்வதேச நடுவர் மையம், பெண் வழக்கறிஞர்களுக்கான லேடீஸ் பார் ரூம் / பெண் வழக்கறிஞர்கள் ஓய்வறை மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தென்னாப்பிரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் நெல்சன் மண்டேலா தினம் ஜூலை 18 அன்று அனுசரிக்கப்படுகிறது.
நிறவெறியை முடிவுக்குக் கொண்டு வருவதில் அவர் ஆற்றிய பங்கிற்காக அமைதிக்கான நோபல் பரிசை (1993) பெற்றார்.