TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 29 , 2026 16 hrs 0 min 25 0
  • 2026 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் மாமல்லபுரத்தில் 31-வது தென் மண்டல சபைக் கூட்டத்தை தமிழ்நாடு நடத்தவுள்ளது.
    • தென் மண்டல சபை என்பது 1956 ஆம் ஆண்டின் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் கீழ் நிறுவப் பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும் என்பதோடு இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, தெலுங்கானா மற்றும் ஒன்றியப் பிரதேசமான புதுச்சேரி ஆகியவை அடங்கும்.
  • பீகாரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான பளுதூக்குதல் வீரர் ஜந்து குமார், கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG), ஆண்களுக்கான ஹெவிவெயிட் பாரா பவர்லிஃப்டிங் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கான முதல் பதக்கத்தைப் பெற்றுத் தந்தார்.
  • ஐக்கிய நாடுகளின் சர்வதேச வர்த்தக சட்ட ஆணையத்தின் (UNCITRAL) 60-வது ஆண்டு விழாவைக் குறிக்கும் வகையில் சர்வதேச மாநாட்டை இந்தியா நடத்தியது.
    • இம்மாநாட்டில் டிஜிட்டல் வர்த்தகம், தொழில்நுட்ப மாற்றங்கள், விநியோகச் சங்கிலிச் சீர்குலைவுகள் மற்றும் மாறிவரும் உலகளாவிய வர்த்தக முறைகள் ஆகியவற்றின் சவால்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • புது தில்லியில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு உலக ஜூனியர் ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை இந்திய ஸ்குவாஷ் வீராங்கனை அனாஹத் சிங் பெற்றார்.
  • இந்தியாவின் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட பார்கவாஸ்த்ரா கூட்டு/இணை ஆளில்லா வான்வழி வாகன எதிர்ப்பு அமைப்பு மகாராஷ்டிராவின் நாக்பூரில் காட்சிப் படுத்தப் பட்டது.
  • இளம் பருவத்தினருக்கு (15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்) நாடு தழுவிய சமூக ஊடகத் தடையை விதித்த ஐரோப்பாவின் முதல் நாடு பிரான்ஸ் ஆகும்.
    • கடந்த டிசம்பரில், டிக்டாக், யூடியூப், ஸ்னாப்சாட் மற்றும் பிற முன்னணி தளங்களில் 16 வயதுக்குட்பட்டவர்களின் கணக்குகளை நீக்குமாறு அல்லது கடுமையான அபராதங்களை எதிர்கொள்ளுமாறு கட்டாயப்படுத்திய உலகின் முதல் நாடாக ஆஸ்திரேலியா ஆனது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்