TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 30 , 2026 3 days 65 0
  • சீனாவின் செயற்கை நுண்ணறிவு (AI) புத்தொழில் நிறுவனமான மூன்ஷாட் AI (Moonshot AI), உலகின் முதல் திறந்த மூல 3-டிரில்லியன்-அளவுருக்கள் கொண்ட செயற்கை நுண்ணறிவு மாதிரியான கிமி K3-ஐ அறிமுகப்படுத்தியது.
  • ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் (CWG) ஆடவர் 65 கிலோ எடைப்பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பறவைகள் சரணாலயமானது, மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள தானே க்ரீக் ஃபிளமிங்கோ சரணாலயத்தில் (TCFS) உருவாக்கப்பட்டு வருகிறது.
    • TCFS ஒரு அங்கீகரிக்கப்பட்ட ராம்சார் தளமாகவும், மத்திய ஆசிய பறவைகள் வழித்தடத்தில் ஒரு முக்கிய நிறுத்தமாகவும் விளங்குகிறது.
  • மத்திய அரசு, மூத்த ஐஏஎஸ் அதிகாரியான அனுராக் ஜெயினை நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது.
    • பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (DoPT) வெளியிட்ட அதிகாரப்பூர்வ உத்தரவின் படி, இந்த நியமனத்திற்கு அமைச்சரவையின் நியமனக் குழு (ACC) ஒப்புதல் அளித்துள்ளது.
  • மக்கள், சமூகங்கள் மற்றும் நாடுகளிடையே அமைதி, ஒற்றுமை, பரஸ்பர புரிதல் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 30 அன்று சர்வதேச நட்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
  • ஆட்கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், சுரண்டலால் பாதிக்கப் பட்டவர்களைப் பாதுகாப்பதற்காகவும் ஜூலை 30 அன்று ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Trapped Behind the Scam” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்