நிகழ்நேரப் பணப் பரிமாற்றங்களுக்காக இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் ஃபவாரா-ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (Favara-UPI) எல்லை தாண்டிய கட்டண வழிமுறையைத் தொடங்கியுள்ளன.
கர்நாடகாவில் இருந்து மாலத்தீவுக்கு நீலம் மற்றும் தோத்தாபுரி மாம்பழங்கள் முதன் முறையாக விமானம் மூலம் அனுப்பப்படுவதற்கு வேளாண் மற்றும் பதப்படுத்தப் பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA) வசதி செய்துள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள போகபுரத்தில் அல்லூரி சீதாராம ராஜு சர்வதேச விமான நிலையத்தை இந்தியப் பிரதமர் திறந்து வைத்தார்.
இது 2014 ஆம் ஆண்டு மாநிலப் பிரிவினைக்குப் பிறகு ஆந்திரப் பிரதேசத்தில் அமைக்கப்பட்ட முதல் நவீன கட்டமைப்புகளுடன் கூடிய சர்வதேச விமான நிலையமாகும்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டிற்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் அஸ்மிதா டே (பெண்கள் 48 கிலோ எடைப்பிரிவு) மற்றும் ஹர்ஷ் சிங் (ஆண்கள் 60 கிலோ எடைப்பிரிவு) ஆகியோர் ஜூடோவில் இந்தியாவின் முதல் தங்கப் பதக்கங்களை வென்றனர்.
இயற்கை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த அல்லது காயமடைந்த வனக்காவலர்களை கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 31 அன்று உலக வனக்காவலர்கள் தினம் கடை பிடிக்கப் படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Rangers: Guardians of a Changing Planet என்பதாகும்.