வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), பீகாரிலிருந்து புவிசார் குறியீடு பெற்ற மிதிலா மக்கானாவை ஆஸ்திரேலியாவிற்கு கடல் வழியாக முதல் முறையாக வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது.
2022 ஆம் ஆண்டில் புவிசார் குறியீட்டைப் (GI) பெற்ற, பீகாரின் மிதிலா பகுதியில் முக்கியமாக உற்பத்தி செய்யப்படுகின்ற மிதிலா மக்கானா என்பது நீர்வாழ் தாமரை விதை (Fox nut) ஆகும்.
11வது பிரிக்ஸ் கலாச்சார அமைச்சர்கள் கூட்டம் மத்தியப் பிரதேசத்தின் போபாலில், போபால் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டதன் மூலம் முடிவடைந்தது.
போபால் பிரகடனமானது, கலாச்சாரம் மற்றும் ஆக்கப்பூர்வமான துறைகளில் பிரிக்ஸ் நாடுகளின் பொதுவான அர்ப்பணிப்புகளைப் பதிவு செய்கிறது.
இந்தியாவில் கடல்சார் நிர்வாகத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்காக ‘மின்னணு-சமுத்ரா’ (E-Samudra) டிஜிட்டல் தளம் மும்பையில் தொடங்கப்பட்டது.
இது 72க்கும் மேற்பட்ட சேவைகளை ஒருங்கிணைத்து, மாலுமிகள், கப்பல் நிறுவனங்கள் மற்றும் துறைமுகங்களுக்கான ஒற்றை டிஜிட்டல் சாளரமாகச் செயல்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபை - தேசிய தாவரவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் (CSIR-NBRI) முதல் சுற்றுச்சூழல் கல்வி மையமான ‘பிரகிருதி ஞான் தாம்’ (Prakriti Gyan Dham), உத்தரப் பிரதேசத்தின் லக்னோவில் திறக்கப்பட்டது.
பல்லுயிர் தன்மை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் கல்வி மற்றும் இந்தியாவின் தாவரவியல் பாரம்பரியம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக பந்த்ராவில் உள்ள மகரிஷி பராஷர் உயிர்வள மையத்தில் இது உருவாக்கப்பட்டது.
மேகாலயாவின் ரி போயிக் மாவட்டத்தில் உள்ள ஜிராங்கில் ‘ருசுலா கிரிசோபுர்புராடா’ (Russula griseopurpurata) என்ற புதிய காளான் இனத்தை அறிவியலாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.