TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 16 , 2026 3 days 69 0
  • CSIR-IICT (அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வு மன்றம் - இந்திய இரசாயன தொழில் நுட்ப நிறுவனம்), ஹைதராபாத், நீரிழிவு நோயால் ஏற்படும் கால் புண்களுக்காக ஜிம்னெமா சில்வெஸ்டரைப் (Gymnema sylvestre) பயன்படுத்தி தாவர அடிப்படையிலான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் புதிய மருந்து (IND) நிலைக்குத் தயாராக உள்ள ஒரு மருந்தைக் கண்டறிந்துள்ளது.
  • சென்னையைச் சேர்ந்த 58 வயதான கே. ஜெயலட்சுமி, எவரெஸ்ட் சிகரத்தின் அடிவார முகாமை அடைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் மாற்றுத்திறனாளி பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
  • பெர்சீட் (Perseid) விண்கல் மழை 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12 வாக்கில் உச்சத்தை எட்டியதுடன், அமாவாசை/மறைதிங்கள் காரணமாக இருண்ட வானம் சிறந்த தெரிவு நிலையை வழங்கியது; இது 109P/ஸ்விஃப்ட்-டட்டில் வால்மீனின் சிதறல்களால் ஏற்படுகிறது மற்றும் பெர்சியஸ் விண்மீன் தொகுப்பிலிருந்து வெளிப்படுவது போல் தோன்றுகிறது.
  • சர்வதேச இடதுகை பழக்கமுடையோர் விழிப்புணர்வு தினமானது ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று இடதுகை பழக்கம் உள்ளவர்களைக் கொண்டாடுவதற்காகவும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் அனுசரிக்கப்படுகிறது.
  • உறுப்பு தானத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், தவறான கருத்துக்களைப் போக்கவும், உயிர்களைக் காப்பாற்ற உறுப்புகளை தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 13 அன்று உலக உறுப்பு தான தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்