தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் (TANSIM) தலைவராக சிங்கை ஜி. ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசு 1865 ஆம் ஆண்டு முதல் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க சொத்து ஆவணங்கள் மற்றும் 2018 ஆம் ஆண்டு வரையிலான பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ்களை மின்மயமாக்க உள்ளது.
பதிவுத் துறையானது, ஏற்கனவே மின்மயமாக்கப்பட்ட ஆவணங்களை மீண்டும் ஸ்கேன்/வருடல் செய்யாமல், 1865 முதல் 1974 ஆம் ஆண்டு வரையிலான 7.06 கோடி பழைய வில்லங்கச் சான்றிதழ்கள் (EC) / குறியீடு-2 ஆவணங்கள் மற்றும் 5.68 கோடி பிறப்பு, இறப்பு ஆவணங்கள் உட்பட 11.14 கோடி பக்கங்களை ஸ்கேன்/வருடல் செய்ய திட்டமிட்டுள்ளது.
வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (APEDA), திரிபுராவிலிருந்து ஆஸ்திரியா மற்றும் நெதர்லாந்துக்கு NPOP சான்றிதழ் பெற்ற 18 மெட்ரிக் டன் பாரம்பரிய அரிசியை ஏற்றுமதி செய்ய வசதி செய்துள்ளது.
ஆரோக்கியமான உணவு மற்றும் முறையான ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, இந்தியாவில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் 7 ஆம் தேதி வரை தேசிய ஊட்டச்சத்து வாரம் (NNW) 2026 அனுசரிக்கப்படுகிறது.
இந்தியாவில் ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியம் பற்றிய விழிப்புணர்வை பரப்பச் செய்வதற்காக, உணவு மற்றும் ஊட்டச்சத்து வாரியம் மூலம் 1982 ஆம் ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து வாரம் தொடங்கப்பட்டது.
உலகின் மிக உயரமான கட்டடங்களுக்குப் பின்னணியில் உள்ள பொறியியல் மற்றும் கட்டிடக்கலையை சிறப்பிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 3 அன்று உலக வானளாவிய கட்டிட தினம் அனுசரிக்கப்படுகிறது.