கூகுள் டீப்மைண்ட் (Google DeepMind) மனித மரபணுவில் ஏற்படும் ஒற்றை மரபணு மாற்றங்களின் விளைவுகளைக் கணிக்கும் தரவுதளமான ஆல்ஃபாஜீனோம் அட்லஸை (AlphaGenome Atlas) அறிமுகப்படுத்தியது.
இது சாத்தியமான 9 பில்லியன் ஒற்றை-நியூக்ளியோடைடு மாறுபாடுகளின் ஒழுங்குமுறை விளைவுகளைக் கணிக்க ஆல்ஃபாஜீனோம் செயற்கை நுண்ணறிவு (AI) மாதிரியைப் பயன்படுத்துகிறது என்பதோடு இதன் மூலம் 1-பெட்டாபைட் தரவுத் தொகுப்பை உருவாக்குகிறது.
இந்திய விமானப்படையானது (IAF) கண்காணிப்பு, உளவு பார்த்தல், தன்னாட்சி செயல் பாடுகள், ஸ்வார்ம் (swarm) தொழில்நுட்பங்கள், மின்னணு போர்முறை மற்றும் ஆளில்லா விமான எதிர்ப்பு அமைப்புகள் (CUAS) ஆகியவற்றைச் சோதிப்பதற்காக தனது முதல் ட்ரோனத்தான்-2026-ஐ (Dronathon-2026) ராஜஸ்தானின் ஜெய்சல்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கி பயிற்சி தளத்தில் தொடங்கியது.
ஒடிசாவில் உள்ள தலாபிரா II மற்றும் III நிலக்கரி சுரங்கமானது 2025–26 ஆம் நிதி ஆண்டில் 19.14 மில்லியன் டன்கள் (MT) என்ற தனது இதுவரை இல்லாத அதிகபட்ச ஆண்டு நிலக்கரி உற்பத்தியைப் பதிவு செய்துள்ளது.
இந்த திறந்தவெளிச் சுரங்கம் ஒடிசாவின் சம்பல்பூர் மற்றும் ஜார்சுகுடா மாவட்டங்களில் அமைந்துள்ளது என்பதுடன் மேலும் இது NLC இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் இயக்கப்படுகிறது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) பாதுகாப்பற்ற பூச்சிக் கொல்லிகள் காரணமாக M/s நீலகிரி ஆயில் & அலைடு இண்டஸ்ட்ரீஸ் தயாரித்த ஷாலிமார்ஸ் செஃப்-கொத்தமல்லித் தூளையும், பாதுகாப்பற்ற காட்மியம் அளவுகள் காரணமாக M/s அக்வாக்ரி ப்ராசசிங் பிரைவேட் லிமிடெட் தயாரித்த கராஜீனன் (Carrageenan) பொருளையும் திரும்பப் பெற உத்தரவிட்டுள்ளது.
2017 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலை (உணவு திரும்பப் பெறுதல் நடைமுறை) விதிமுறைகளின் படி, 2006 ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.