துபாயில் நடைபெற்ற 2026 ஆம் ஆண்டு மகளிர் இருபது20 (டி20) ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில், இலங்கை அணியை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்தியா, சாதனை அளவாக எட்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
மெக்சிகோவில் உள்ள சால்டில்லோவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆடவர் ரிகர்வ் வில்வித்தை வீரர் என்ற பெருமையை இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா பெற்றார்.
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 அன்று இந்தி தினத்துடன், 6வது அகில இந்திய அலுவல் மொழி மாநாடு மும்பையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் இந்தி மொழியின் வளர்ச்சி, இந்திய மொழிகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு, தொழில்நுட்பம், மொழிபெயர்ப்பு மற்றும் இலக்கியம் குறித்து விவாதிக்கப்பட்டது.
பெங்களூருவில் நடைபெற்ற குளோபல் செஸ் லீக் (GCL) தொடரில், நடப்பு சாம்பியனான ஆல்பைன் APL பைப்பர்ஸ் அணியை வீழ்த்தி கங்கை கிராண்ட் மாஸ்டர்ஸ் அணி தங்களது முதல் பட்டத்தை வென்றது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையமானது (NHAI) செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் நிகழ்நேர இருப்பிடக் கண்காணிப்பு ஆகியவற்றைப் பயன்படுத்தி அதன் 1033 தேசிய நெடுஞ்சாலை உதவி எண்ணை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட 1033 உதவி எண் 24 மணிநேரமும் செயல் படுகிறது மற்றும் 1.46 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தேசிய நெடுஞ்சாலைகளை உள்ளடக்கியுள்ளது.
மிசோரம் மாநிலத்தின் டட்டாஃப்ரைனஸ் பாவங்புய் (Duttaphrynus phawngpui) மற்றும் இன்ஜெரானா ஐஸ்வால் (Ingerana aizawl) ஆகியன அறிவியல் உலகிற்கு புதிய இரண்டு தவளை இனங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
பாவங்புய் தேசிய பூங்காவில் 2,000 மீட்டருக்கு மேல் காணப்பட்ட டட்டாஃப்ரைனஸ் பாவங்புய் தவளையானது மிசோரமின் மிக உயர்ந்த சிகரமான பாவங்புய் என்பதன் நினைவாக பெயரிடப் பட்டது.