TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 18 , 2026 3 days 42 0
  • 1861 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அன்று பிறந்த பாரத ரத்னா விருது பெற்ற சர் M. விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், கர்நாடக மாநிலம் செப்டம்பர் 15 ஆம் தேதியை அதிகாரப்பூர்வ பொறியாளர் தின நிகழ்வாக அறிவித்து, பொறியாளர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் "Er." என்ற பட்டத்தைப் பயன்படுத்த அனுமதித்துள்ளது.
  • "அசாமின் இரும்புப் பெண்மணி" என்று அழைக்கப்படும் இந்தியக் காவல் பணி (IPS) அதிகாரியான சஞ்சுக்தா பராஷர், மத்திய சேமக் காவல் படையின் (CRPF) சிறப்புப் பிரிவான கோப்ரா (CoBRA) கமாண்டோ பிரிவின் தலைவராக (IG) பதவியேற்ற முதல் பெண் அதிகாரி என்ற பெருமையைப் பெற்றார்.
  • உள்நாட்டுப் பெருங்கடல் ஆராய்ச்சித் திறன்களை வலுப்படுத்தும் நோக்கில், கொல்கத்தாவில் உள்ள ரிஷி பங்கிம் கப்பல் கட்டும் தளத்தில் 'சாகர் மந்தன்' (Sagar Manthan) என்ற பெருங்கடல் ஆய்வுக் கப்பலை (ORV) இந்தியா அறிமுகப்படுத்தியது.
  • பெங்களூரு விண்வெளி கண்காட்சியில், பெங்களூருவைச் சேர்ந்த ஆஸ்ட்ரோகேட் லேப்ஸ் (Astrogate Labs) நிறுவனம் இந்தியாவின் முதல் உள்நாட்டு ஒளியியல் செயற்கைக் கோள் இடைத்தொடர்பு (OISL) முனையத்தை அறிமுகப்படுத்தியது.
    • OISL முனையமானது செயற்கைக்கோள்களுக்கு இடையே நேரடியான, அதிவேக தகவல் தொடர்புக்கு லேசர் கற்றைகளைப் பயன்படுத்துகிறது, இதன் மூலம் தரையில் உள்ள நிலையங்களைச் சார்ந்திருப்பது குறைக்கப்படுகிறது.
  • உத்தரகாண்ட் மாநிலத்தில் அண்டம் சேகரிப்பு மற்றும் செயற்கை முறை கருத்தரித்தல் (OPU-IVF) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு ஆரோக்கியமான பத்ரி (Badri) பெண் கன்று வெற்றிகரமாகப் பிறந்துள்ளது.
    • பத்ரி மாடுகள் உத்தரகாண்ட் மாநிலத்தின் மலைப் பகுதிகளுக்கு ஏற்ற ஒரு உள் நாட்டு இனமாகும்.
  • விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் முதல்முறையாக, நாடோடி வண்ணத்துப் பூச்சியின் (பரேரோனியா ஹிப்பியா) அரிய வகையான பிலோமேலா (philomela) வடிவம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • இன்றுவரை, இந்த வண்ணத்துப்பூச்சி இனம் வரலாற்று ரீதியாக பெரும்பாலும் வட கிழக்கு இந்தியா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளுடன் தொடர்புபடுத்தப்பட்டு வந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்