இந்திய வாகன ஆராய்ச்சிச் சங்கத்தின் (ARAI) புனேவின் தக்வேயில் உள்ள வசதி ஆனது உயர் அழுத்த சிலிண்டர்/உருளைக் கொள்கலன் பரிசோதனைக்காக வேண்டி சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் (NABL) அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.
ARAI ஆனது 1966 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது, அதே நேரத்தில் NABL என்பது சோதனை மற்றும் அளவுத் திருத்த ஆய்வகங்களுக்கான இந்தியாவின் தேசிய அங்கீகார அமைப்பாகும்.
ஈரானிய அரசு தரப்புடன் தொடர்புடையதும், வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராமில் ஸ்பியர்-ஃபிஷிங் இணையவழி மோசடி முறை குறித்த பிரச்சாரங்கள் மூலம் பயன்படுத்தப் படுவதுமான சோசன் பிரிக் (CHOSEN BRICK) என்ற உளவு மென்பொருள் குறித்து இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்து ஒரு கூட்டு ஆலோசனையை வெளியிட்டன.
இந்த ஸ்பைவேரால்/உளவுமென்பொருளால் மின்னஞ்சல்கள், செய்திகள் மற்றும் தொடர்புப் பட்டியல்களைத் திருடவும், திரைகளைப் படம் பிடிக்கவும், சமூக ஊடகக் கணக்குகளை அணுகவும் மற்றும் சாதனத்தின் மைக்ரோ ஃபோனை / மின்சார ஒலிபெருக்கியைப் பயன்படுத்தவும் முடியும்.
ஓபியோபோகன் ஜபோனிகஸ் (Ophiopogon japonicus) என்பது இந்தியாவில் முதல் முறை ஆக அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு காமெங் மாவட்டத்தில் பதிவு செய்யப் பட்டு உள்ளது; இது பொதுவாக குள்ள லில்லிடர்ஃப் அல்லது மாண்டோ புல் என்று அழைக்கப் படுகிறது மற்றும் இது ஒரு பசுமையான வற்றாத தாவரமாகும்.
ஓபியோபோகோனிஸ் ரேடிக்ஸ் (Ophiopogonis Radix - மைடாங்) என்று அழைக்கப் படும் அதன் கிழங்கு வேர்கள் பாரம்பரிய சீன மருத்துவத்தில் பயன்படுத்தப் படுகின்றன.
ஸ்கிசோபைகோப்சிஸ் வாடெல்லி (Schizopygopsis waddellii) இந்தியாவில் முதல் முறையாக அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங்கில் உள்ள பாங்காங் டெங் த்சோ ஏரியில் பதிவு செய்யப் பட்டுள்ளது.
இது 'ஸ்னோட்ரவுட்'/பனிக்கெண்டை (snowtrout) வகையைச் சேர்ந்த, சைப்ரினிடி (Cyprinidae) குடும்பத்தைச் சார்ந்த, குளிர்ந்த சூழலுக்கு ஏற்ற ஒரு நன்னீர் மீன் ஆகும்.
MG ஹெக்டர் டோமாஹாக் (MG Hector Tomahawk) என்பது இந்தியாவின் முதல் பிரதான பிளக்-இன் கலப்பின மின்சார வாகனம் (PHEV) SUV (விளையாட்டு மற்றும் பயன்பாட்டு வாகனம்) ஆகும்.
PHEV என்பது பெட்ரோல் எஞ்சின் மற்றும் மின்சார மோட்டாரை வெளிப்புறமாக மின்னேற்றம் செய்யக் கூடிய மின்கலத்துடன் ஒருங்கிணைக்கிறது, இது வழக்கமான கலப்பினங்களை விட நீண்ட தூரத்திற்கு மின்சார சக்தியில் மட்டுமே இயங்க அனுமதிக்கிறது.