TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 20 , 2026 5 hrs 0 min 32 0
  • ஓட்டுநர் உரிம விண்ணப்பதாரர்களுக்கு சர்வதேச தரத்தின் அடிப்படையிலான 1 நிமிட அளவிலான 10 காணொளிகளைப் பயன்படுத்தி, சாலை அபாயங்களைக் கண்டறிந்து சரியான நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் வகையில் அவர்களின் திறன் இதில் சோதிக்கப்படும் விதமாக கட்டாய அபாய உணர்திறன் சோதனையை (HPT) இந்தியாவிலேயே முதன்முறையாக கேரளா அறிமுகப்படுத்த உள்ளது.
  • பால்மீனின் சந்தை வாய்ப்பையும் நுகர்வோர் ஏற்பையும் மேம்படுத்தும் நோக்கில், ICAR-CIBA (இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகம் – மத்திய உவர்நீர் மீன்வளர்ப்பு நிறுவனம்) முள் நீக்கும் தொழில்நுட்பம் ஒன்றை அறிமுகப்படுத்தியது.
  • டாடா சன்ஸ் குழுமத்தின் செயல் தலைவராக என். சந்திரசேகரன் மேலும் ஐந்தாண்டு காலத்திற்கு (2027 ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2032 ஆம் ஆண்டு பிப்ரவரி வரை) மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சென்னையில் பிறந்த அறிவியலாளரான சேதுராமன் பஞ்சநாதன் 2026 ஆம் ஆண்டிற்கான IEEE ராபர்ட் போஷ் பியூச் விருதுக்கு (IEEE Robert Bosch Bueche Award) தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் இந்திய-அமெரிக்கர் ஆவார்.
    • பியூச் விருதானது தொழில்நுட்பம் மற்றும் பொதுக் கொள்கைக்கான சிறந்தப் பங்களிப்புகளை அங்கீகரிக்கிறது.
  • நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணரான மைக்கேல் கிரேமர், 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 அன்று உலக வங்கிக் குழுமத்தின் தலைமைப் பொருளாதார நிபுணராகவும், மேம்பாட்டுப் பொருளாதாரத்திற்கான மூத்த துணைத் தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
    • வறுமையை ஆய்வு செய்ய பரிசோதனைகளைப் பயன்படுத்தியதற்காக 2019 ஆம் ஆண்டில் அபிஜித் பானர்ஜி மற்றும் எஸ்தர் டுஃப்லோ ஆகியோருடன் இணைந்து கிரேமர் பொருளாதார அறிவியலுக்கான நோபல் பரிசைப் பகிர்ந்துகொண்டார்.
  • இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 6,318 மீட்டர் உயரமுள்ள ராம்ஜாக் (Ramjak) சிகரத்தை அடைந்த கேரளாவைச் சேர்ந்த முதல் குழு என்ற பெருமையை மூணாறைச் சேர்ந்த நான்கு மலையேறுபவர்கள் பெற்றுள்ளனர்.
    • ராம்ஜாக் சிகரம் இமாச்சலப் பிரதேசத்தின் தொலைதூர லாஹவுல் (Lahaul) பகுதியில் அமைந்துள்ளது.
  • அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி மன்றம் - தேசிய அறிவியல் தொடர்பு மற்றும் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (CSIR-NIScPR) ஆனது, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி அறிவியல் அறிவை பரவலாக்குவதற்காக ஆராய்ச்சி கட்டுரைகளை குறுகிய காணொளிகளாக மாற்றுவதற்கு என்று அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையின் (ANRF) முன்னெடுப்பான SARAL AI என்பதைப் பயன்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்