இந்திய கடற்படையின் முதல் தலைமுறை எறிகணை கப்பலின் (Next Generation Missile Vessel - NGMV) அடித்தளம் கொச்சியில் உள்ள கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட் (CSL) நிறுவனத்தில் நாட்டப் பட்டது.
ஆந்திரப் பிரதேசத்தின் நாயுடுபேட்டையில் இந்தியாவின் மிகப்பெரிய 7 GW N-வகை TOPCon (Tunnel Oxide Passivated Contact) சூரிய மின்கல வசதியை பிரீமியர் எனர்ஜிஸ் நிறுவனம் அமைத்துள்ளதன் மூலம் அதன் மொத்த சூரிய மின்கல உற்பத்தி திறன் 10.6 GW ஆக உயர்ந்துள்ளது என்ற நிலையில் இது இந்தியாவில் மிக அதிகபட்சமாகும்.
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் ஆசியாவின் முதல் தொலைத்தொடர்பு உற்பத்தி மண்டலத்தை (TMZ) சுமார் ரூ.5,500 கோடி மதிப்பீட்டில் அமைக்க உள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தி அருகே உள்ள சந்திராபூரில் NETRA (விண்வெளிப் பொருட்கள் கண்காணிப்பு மற்றும் பகுப்பாய்விற்கான வலைப்பின்னல்) திட்டத்தின் கீழ் இஸ்ரோவின் மேம்பட்ட ரேடார் ஆராய்ச்சி மையத்திற்கான அடிக்கல் நாட்டப் பட்டது.
2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 20 அன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் (MoU) கீழ் டெல்லியின் 160 ஆண்டுகள் பழமையான சாந்தினி சௌக் டவுன் ஹால் வளாகம் உலகளாவிய பாரம்பரிய மையமாக மறுவடிவமைப்பு செய்யப்பட உள்ளது.
இந்தியாவின் முதல் அங்கீகரிக்கப்பட்ட டெங்கு தடுப்பூசியான 'கியூடெங்கா' (Qdenga), 4 முதல் 60 வயதுடையவர்களுக்காக 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பின் (CDSCO) ஒப்புதலைப் பெற்றதுடன் 2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் தனியார் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூலில் உள்ள தேசிய திறந்தவெளி தளத்தில் (NOAR) காட்சிப் படுத்தப் பட்ட ஒருங்கிணைந்த ஆளில்லா விமானம் கண்டறிதல் மற்றும் தடுப்பு அமைப்பின் (IDD&IS) Mk-II(A) கீழ் 5 கி.மீ வரையிலான ஆளில்லா விமானங்கள் மற்றும் கண்காணிப்பு உணரிகளை எதிர்கொள்ளும் வகையில் 30 கிலோவாட் (kW) இயக்கப்பட்ட ஆற்றல் ஆயுதத்தை (DEW) DRDO உருவாக்கி வருகிறது.
வடகிழக்கு இந்தியாவின் மிகப்பெரிய மின் நிலையமான அதானி பவர் நிறுவனத்தின் ரூ.48,000 கோடி மதிப்பிலான, 3,200 மெகாவாட் அதி-சிறப்பு அனல் மின் நிலையத்திற்கு அசாம் மாநிலம் துப்ரியில் உள்ள சாப்பரில் அடிக்கல் நாட்டப்பட்டது.