TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 10 , 2026 12 hrs 0 min 31 0
  • பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் (IISc) பேராசிரியர் மகேஷ் காக்டே, இயற்கணித எண் கோட்பாட்டிற்கான அவரது பங்களிப்பிற்காக 2026 ஆம் ஆண்டுக்கான ராமானுஜன் பரிசைப் பெற்றார்.
    • வளரும் நாடுகளைச் சேர்ந்த 45 வயதுக்குட்பட்ட கணிதவியலாளர்களுக்கு அவர்களின் சிறந்த ஆராய்ச்சிக்காக 2005 ஆம் ஆண்டு முதல் ராமானுஜன் பரிசு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.
  • 12வது தேசிய கடல்சார் தேடல் மற்றும் மீட்புப் பயிற்சி (SAREX-2026) இந்திய கடலோர காவல்படையால் (ICG) ஒடிசாவின் பாரதீப் கடற்கரையில் நடத்தப்படுகிறது.
  • 10வது இந்திய மொபைல் காங்கிரஸ் (IMC) 2026 புது தில்லியில் "எல்லைகளற்ற விரிவாக்கம்" என்ற கருத்துருவின் கீழ் நடைபெறுகிறது.
    • இந்நிகழ்வு 6G, செயற்கை நுண்ணறிவு (AI), 5G, செயற்கைக்கோள் தகவல் தொடர்பு, இணையப் பாதுகாப்பு, குறைக்கடத்திகள், குவாண்டம் தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
  • பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா-கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ் 3D-அச்சிடப் பட்ட கிராமப்புற வீடுகளுக்கான இந்தியாவின் முதல் தேசிய அளவிலான சோதனைத் திட்டம் ஆந்திரப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டது.
    • 2021 ஆம் ஆண்டில், இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) மற்றும் த்வஸ்தா புத்தொழில் நிறுவனம் ஆகியவை இணைந்து IIT Madras வளாகத்தில் இந்தியாவின் முதல் 3D-அச்சிடப்பட்ட ஒற்றை மாடி வீட்டினை அறிமுகப்படுத்தின.
  • மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும், ஆரம்பகால நோயறிதல் மற்றும் தரமான சிகிச்சைக்கான அணுகலை மேம்படுத்துவதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 1 முதல் 31 ஆம் தேதி வரை மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு “Every Story Is Unique, Every Journey Matters” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்