TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 11 , 2026 14 days 146 0
  • பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCEA), டெல்லிக்கான நுண்ணறிவு போக்குவரத்து மேலாண்மை அமைப்புத் (ITMS) திட்டத்திற்கு ₹1,789.52 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளித்துள்ளது.
    • இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் இயங்கும் தகவமைக்கக்கூடிய போக்குவரத்து சமிக்ஞைகள், தானியங்கி போக்குவரத்து அமலாக்கம் மற்றும் நிகழ்நேரப் போக்குவரத்து தகவல் ஆகியவற்றை பயன்படுத்தும்.
  • 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான திருமணத்தை தடை செய்த முதல் அமெரிக்க மாகாணமாக டெலாவேர் உருவெடுத்துள்ளது.
  • எதிர்கால இராணுவ ஆதிக்கத்திற்கான தொழில்நுட்பங்களை அடையாளம் காண்பதற்காக எலோன் மஸ்க் மற்றும் பிற நிபுணர்கள் தலைமையிலான 120 நாள் முன்னெடுப்பான 'மெரிடியன் திட்டத்தை' அமெரிக்க போர்த்துறை தொடங்கியுள்ளது.
    • இது நிலத்தடி சூழல்கள் முதல் சிஸ்லூனார் விண்வெளி (பூமிக்கும் நிலவுக்கும் இடைப்பட்ட பகுதி) வரையிலான எதிர்காலப் போர்க்களங்களை ஆய்வு செய்யும்.
  • படைமண்டலத்தில் நீண்ட நேரக் கண்காணிப்பிற்காக வடிவமைக்கப்பட்ட காற்றை விட லேசான அமைப்பான, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட உயர் உயர தளத்தை (HAPS) பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
  • மக்களின் அன்றாட வாழ்வில் அஞ்சல் சேவைகளின் முக்கியத்துவம் மற்றும் சமூக, பொருளாதார வளர்ச்சியில் அவற்றின் பங்களிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 9 அன்று உலக அஞ்சல் தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு “World Post Day: One Postal Network, Infinite Possibilities” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்