2030 ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறனை எட்ட இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், சென்னையில் நடைபெற்ற வின்டர்ஜி இந்தியா 2026-இன் 8வது பதிப்பை மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தொடங்கி வைத்தார்.
2025-26 ஆம் ஆண்டில் 6.05 ஜிகாவாட் சாதனை அளவிலான வருடாந்திர நிறுவலின் மூலம், இந்தியாவின் நிறுவப்பட்ட காற்றாலை மின் உற்பத்தித் திறன் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 நிலவரப்படி 59.20 ஜிகாவாட்டை எட்டியுள்ளது.
2026 ஆம் ஆண்டு அக்டோபர் 12 அன்று ஆறு மாநிலங்களுக்கான ஆளுநர் நியமனங்களை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்தார்: ராஜேந்திர அர்லேகர் (தமிழ்நாடு), சுதா யாதவ் (கர்நாடகா), ஓம் பிரகாஷ் மாத்தூர் (கேரளா), பிரஜ் மோகன் ராம் (ஒடிசா), தல் சிங் பிசன் (உத்தரகாண்ட்) மற்றும் துஷ்யந்த் கௌதம் (சிக்கிம்).
கர்நாடக ஆளுநராக இருந்த தாவர்சந்த் கெலாட்டிற்குப் பதிலாக சுதா யாதவ் நியமிக்கப்பட்டதன் மூலம், அம்மாநிலத்தின் இரண்டாவது பெண் ஆளுநரானார்; கேரளாவின் கூடுதல் பொறுப்பை வகித்து வந்த அர்லேகர் தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநரானார்.
புகழ்பெற்ற மிருதங்கக் கலைஞர் குருவாயூர் துரை தனது 92 ஆவது வயதில் காலமானார்.
அவர் பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது மற்றும் கலைமாமணி விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளார்.
பேரியல் பொருளாதார நிலைப்படுத்தலின் நுண்பொருளியல் அடித்தளங்கள் குறித்த அவர்களின் பணிகளுக்காக, அமெரிக்கப் பொருளாதார நிபுணர்களான ராபர்ட் இ. ஹால் மற்றும் மைக்கேல் உட்ஃபோர்ட் ஆகியோர் பொருளாதார அறிவியலுக்கான 2026 ஆம் ஆண்டின் நோபல் நினைவுப் பரிசை வென்றனர்.
முட்டையின் ஊட்டச்சத்து நன்மைகள் மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்வதில் அவற்றின் பங்கு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டின் உலக முட்டை தினமானது அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வெள்ளிக் கிழமையன்று (2026 ஆம் ஆண்டு அக்டோபர் 09) அனுசரிக்கப்பட்டது.
பேரிடர்-பாதுகாப்பான வீடுகள் மற்றும் நெகிழ்வான வீடுகளில் முதலீடு செய்வது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, பேரிடர் அபாயக் குறைப்பிற்கான சர்வதேச தினமானது ஆண்டுதோறும் அக்டோபர் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான இதன் கருத்துரு is “Resilience Starts at Home” என்பதாகும்.