ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் போர் தயார்நிலை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ராணுவ நடவடிக்கைகளை சோதிப்பதற்காக இந்திய ராணுவம் அகண்ட் பிரஹார்-II (Akhand Prahar-II) கூட்டுப் பயிற்சியை மேற்கொண்டது.
ஏ.பி. முல்லர்-மெர்ஸ்க் (A.P. Moller-Maersk) நிறுவனம் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சென்னை அருகே உள்ள லார்சன் அண்ட் டூப்ரோ (L&T) காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் தனது சிங்கப்பூர் கொடியிடப்பட்ட கொள்கலன் கப்பலான மெர்ஸ்க் சட்டோகிராமுக்கான (Maersk Chattogram) முதல் உலர் கப்பல்துறை (drydocking) பராமரிப்புப் பணிகளை இந்தியாவில் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
உலர் கப்பல்துறை என்பது ஆய்வு, பராமரிப்பு மற்றும் பழுதுபார்ப்பதற்காக ஒரு கப்பலை தண்ணீரிலிருந்து வெளியே எடுப்பதை உள்ளடக்கியதாகும்.
ஜிம்பாப்வேயில் வசிக்கும் 14 வயதான இங்கிலாந்து புகைப்படக் கலைஞர் ஆஸ்கார் விட்ஃபீல்ட், 2026 ஆம் ஆண்டின் இளம் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் விருதை வென்றார்.
இந்தியாவில் முற்றிய உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய்க்காக (Esophageal Squamous Cell Carcinoma - ESCC) சைடோர்வி (டோரிபாலிமாப்) மருந்தை பயன்படுத்த டாக்டர் ரெட்டிஸ் லேபரட்டரீஸ் நிறுவனம் இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரலிடம் (DCGI) இருந்து ஒப்புதல் பெற்றுள்ளது.
உணவுக்குழாய் செதிள் உயிரணு புற்றுநோய் (ESCC) என்பது ஒரு வகையான உணவுக்குழாய் புற்றுநோயாகும், இதில் உணவுக்குழாயின் உட்புறத்தில் உள்ள செதிள் உயிரணுக்களில் புற்றுநோய் உருவாகிறது.
வாழும் பாரம்பரியத்தின் பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்காகவும், அதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தச் செய்வதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 17 அன்று அருவப் பண்பாட்டு மரபுக்கான சர்வதேச தினம் அனுசரிக்கப்படுகிறது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடைபெற்ற 42வது யுனெஸ்கோ பொது மாநாட்டில் இந்த நாள் அறிவிக்கப்பட்டது.