TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 24 , 2026 15 hrs 0 min 15 0
  • ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம் அதன் 'தக்சதா பொறியியல் பாதுகாப்பு: ஒரு நேரத்தில் ஒரு பணி நிலை' (Dakshata Engineering Safety: One Duty Position at a Time) எனும் திட்டத்திற்காக 2026 ஆம் ஆண்டிற்கான ஸ்டீலி விருதினை 'மக்களில் சிறந்து விளங்குதல்' (Excellence in People) பிரிவில் வென்றுள்ளது.
    • தக்சதா திட்டமானது, பணியாளர்களை பணியமர்த்துவதற்கு முன்பாகப் பணி சார்ந்த பாதுகாப்புப் பயிற்சி, திறன் மதிப்பீடு மற்றும் மறு மதிப்பீடு ஆகியவற்றை வழங்குகிறது.
  • பாரத ஸ்டேட் வங்கி (SBI) அதன் டிஜிட்டல் கண்டுபிடிப்பு, சேவைச் சிறப்பு மற்றும் நிதி உள்ளடக்கம் ஆகியவற்றை அங்கீகரிக்கும் வகையில், குளோபல் ஃபைனான்ஸ் இதழின் "2026 ஆம் ஆண்டின் உலகின் சிறந்த நுகர்வோர் வங்கி" விருதினைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வென்றுள்ளது.
  • முசோரியில் நடைபெற்ற தேசிய நல் ஆளுமை மையத்தின் (NCGG) திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் பாஷினியின் ஷ்ருத்லேக் (Shrutlekh) தளமானது நிகழ்நேர ஆங்கிலம்-ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பைச் சாத்தியமாக்கியதுடன் இது குரலுக்கு முன்னுரிமை அளிக்கும் பன்மொழி செயற்கை நுண்ணறிவுத் (AI) தொழில்நுட்பத்தை வெளிப்படுத்துகிறது.
  • நியூ மெக்ஸிகோவை "நியூ அமெரிக்கா" என மறுபெயரிட வேண்டும் என்ற தனது கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதுப்பித்துள்ளார்.
    • டிரம்ப் முதன்முதலில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்தப் பெயர் மாற்றத்தை முன்மொழிந்தார். ஆனால் மாநில அதிகாரிகள் அந்த முன்மொழிவை நிராகரித்தனர்.
  • தமிழ்நாட்டின் வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் (வ.உ.சி துறைமுகம்) அமைந்துள்ள தூத்துக்குடி சர்வதேசக் கொள்கலன் முனையம் (TICT), அதன் செயல்பாட்டு உபகரணங்கள் 100% மின்மயமாக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 22 அன்று பசுமை முனையமாக அறிவிக்கப்பட்டது.
    • வ.உ.சி துறைமுகம் 2026 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 அன்று ஸ்கோப் 2 உமிழ்வு இல்லாத இந்தியாவின் முதல் பெரிய துறைமுகமாக மாறியதோடு இது ஆற்றல் நிர்வாகத்திற்கான ISO 50001:2018 சான்றிதழையும் பெற்றுள்ளது.
  • அசாம் மாநிலத்தின் கோல்பாரா மாவட்டத்தில் உள்ள கிணறுகளில் கிட்சாக் நகனா மற்றும் ரக்தமிச்சிஸ் அன்சி ஆகிய இரண்டு புதிய நிலத்தடி மீன் சிற்றினங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்