TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 27 , 2026 2 days 76 0
  • கனடாவிலிருந்து பிரிவதற்கான தனது முதல் வாக்கெடுப்பினை ஆல்பர்ட்டா மாகாணம் நடத்தியது; இதில் 76% பேர் கனடாவுடன் இணைந்திருக்கவும், 24% பேர் பிரிந்து செல்லவும் வாக்களித்துள்ளனர்; இந்த வாக்கெடுப்பு முடிவுகள் எவ்வித கட்டுப்பாடுகளையும் கொண்டிருக்கவில்லை.
    • மேற்கு கனடாவின் முக்கிய ஆற்றல் உற்பத்தி மாகாணமான ஆல்பர்ட்டாவில் ஒரு பிரிவினைவாத இயக்கம் நடைபெற்று வரும் வேளையில் இந்த வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளது.
  • ஆழமற்ற நீர்நிலைகளைக் கொண்ட கிருஷ்ணா - கோதாவரி (KG) படுகையில் இயற்கை எரிவாயுவை ஆயில் இந்தியா லிமிடெட் (OIL) நிறுவனம் கண்டறிந்து உள்ளதுடன் இதில் கோதாவரி-1 கிணறு நாளொன்றுக்கு 200,000 நிலையான கன மீட்டர் (SCMD) என்ற அளவில் அதிகபட்ச ஓட்டத்தை பதிவு செய்துள்ளது.
  • இந்தியாவின் முதல் பனிச்சிறுத்தை எண்ணிக்கை மதிப்பீடு (SPAI) இந்திய இமயமலைப் பகுதிகளில் 718 பனிச்சிறுத்தைகள் இருப்பதாக மதிப்பிட்டுள்ளதுடன் இதில் லடாக்கில் மட்டும் 477 பனிச்சிறுத்தைகள் உள்ளன.
    • பனிச்சிறுத்தை (பாந்தெரா அன்சியா) IUCN செந்நிறப் பட்டியலில் பாதிக்கப்படக் கூடிய (Vulnerable - VU) உயிரினமாக வகைப்படுத்தப் பட்டுள்ளது.
  • நிதி நிலைத்தன்மை மற்றும் மேம்பாட்டுக் குழுவின் (FSDC) 30வது கூட்டமானது, இந்தியாவின் நிதி அமைப்புக்கான உள்நாட்டு, உலகளாவிய பெரும் பொருளாதார-நிதி முன்னேற்றங்கள் மற்றும் வளர்ந்து வரும் அபாயங்களை மறுஆய்வு செய்வதற்காக புதுதில்லியில் நடைபெற்றது.
  • "ரியார்ம் ஐரோப்பா" (Rearm Europe) முன்னெடுப்பின் கீழ் ஏற்பட்ட தேவையின் உந்துதலால், ஐரோப்பாவிற்கு பாதுகாப்பு தளவாடங்களை ஏற்றுமதி செய்யும் 3வது பெரிய நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
    • இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி சாதனையாக ₹38,424 கோடியை எட்டியுள்ளது. மேலும் இந்தியா வெடிமருந்துகள், பீரங்கி குண்டுகள், சிறிய ஆயுதங்கள் மற்றும் தந்திரோபாய உபகரணங்களை விநியோகித்து வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்