பிரேசிலின் 2026 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஃபிளாவியோ போல்சனாரோவை தோற்கடித்து லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று, தனது நான்காவது பதவிக்காலத்தை உறுதி செய்தார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 11 வயது இங்கிலாந்து செஸ் வீராங்கனையான போதனா சிவானந்தன், ஜூடிட் போல்கார் (ஹங்கேரி) வசமிருந்த 38 ஆண்டுகால சாதனையை முறியடித்து, மிகக் குறைந்த வயதில் சர்வதேச மாஸ்டர் (IM) பட்டம் வென்ற வீராங்கனை என்ற சிறப்பைப் பெற்றார்.
2029 ஆம் ஆண்டு நடைபெறும் சீனியர் உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியை அகமதாபாத் தொகுத்து வழங்கும் என்றும், சீனியர் பிரிவிலான இப்போட்டியை இந்தியா நடத்துவது இதுவே முதல் முறை என்றும் சர்வதேச பளுதூக்குதல் கூட்டமைப்பு (IWF) உறுதிப்படுத்தியுள்ளது.
கேரள சிவில் விமானப் போக்குவரத்து மேம்பாட்டுக் கூட்டுறவுச் சங்கம் மூலம் இந்தியாவின் முதல் கூட்டுறவுத் துறை விமானச் சேவையாக முன்மொழியப்பட்ட 'கோ-கேரளம்' (Co-Keralam) என்ற விமானச் சேவையைத் தொடங்க கேரளா ஒப்புதல் அளித்துள்ளது.
இது கொச்சியிலிருந்து செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், கோழிக்கோடு, கண்ணூர், பெங்களூரு, மங்களூரு, சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய நகரங்களை இணைக்கவுள்ளது.
ஒலி-ஒளி ஆவணங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்தும், எதிர்கால சந்ததியினருக்கு அவை கிடைப்பதை உறுதிசெய்வது குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, ஆண்டுதோறும் அக்டோபர் 27 அன்று உலக ஒலி-ஒளி பாரம்பரிய தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Your Window to the World என்பதாகும்.
இயங்குபடத்தினை ஒரு கலை வடிவமாகக் கொண்டாடுவதற்காகவும், இயங்குபடக் கதைகளுக்கு உயிரூட்டும் கலைஞர்கள் மற்றும் ஸ்டுடியோக்களை/கலையகங்களை அங்கீகரிப்பதற்காகவும் ஆண்டுதோறும் அக்டோபர் 28 அன்று சர்வதேச அனிமேஷன்/இயங்குபடத் தினம் அனுசரிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “BEYOND BORDERS” என்பதாகும்.