இந்தியாவின் தேசிய தொலைத்தொடர்பு மருத்துவ சேவையான மின்னணு-சஞ்சீவனி, நாடு முழுவதும் சுமார் 50 கோடி தொலைத்தொடர்பு மருத்துவ ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தால் இது 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கப்பட்டது.
மத்திய தரைக்கடல் பகுதியில் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய பேரரசு இணைந்து அணு ஆயுதத் தாக்குதலை உருவகப்படுத்தும் தங்களது முதல் கூட்டுப் பயிற்சியை "ரம்மி" என்ற பெயரில் நடத்தின.
மேற்கு ஐரோப்பாவில் அணு ஆயுதம் கொண்ட ஒரே நாடுகள் பிரான்ஸ் மற்றும் ஐக்கிய பேரரசு மட்டுமே, மேலும் இவை இரண்டும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் (UNSC) நிரந்தர உறுப்பினர்களாகவும் உள்ளன.
காங்கோ ஜனநாயகக் குடியரசில் (DRC) ஜைர் எபோலா வைரஸ் திரிபுக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியான எர்வெபோ (Ervebo), புண்டிபுக்யோ வைரஸுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கிறதா என்பதைப் பரிசோதிக்க டுமைனி (Tumaini) பரிசோதனையைத் தொடங்க உலக சுகாதார நிறுவனம் (WHO) ஆதரவளித்தது.
கடுமையான நோய் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும் எபோலா வைரஸ் வகையான புண்டிபுக்யோ வைரஸ் முதன்முதலில் 2007 ஆம் ஆண்டு உகாண்டாவின் புண்டிபுக்யோ மாவட்டத்தில் கண்டறியப்பட்டது.
ஊதியம் பெறும் மற்றும் ஊதியம் பெறாத பராமரிப்புப் பணிகளை அங்கீகரிக்கும் வகையிலும், சிறந்த பராமரிப்பு அமைப்புகளை மேம்படுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29 அன்று ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பராமரிப்பு மற்றும் ஆதரவு தினத்தை அனுசரிக்கிறது.
2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு “Building Sustainable Care and Support Systems through Decent Work” என்பதாகும்.
ஆயுதக் குறைப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஐக்கிய நாடுகள் சபை 2026 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 முதல் 30 ஆம் தேதி வரை ஆயுதக் குறைப்பு வாரத்தை அனுசரிக்கிறது.
2026 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஆயுதக் குறைப்பு வாரத்தின் கருத்துரு "Disarm for Peace: Fewer Weapons, Safer Communities" என்பதாகும்.