TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 2 , 2026 7 days 110 0
  • கம்மம் மாவட்டத்தில் உள்ள நிலகொண்டபள்ளியில் பாதுகாக்கப்பட்ட புத்தமத தளத்தை சர்வதேச பாரம்பரிய மற்றும் சுற்றுலா தலமாக மேம்படுத்துவதற்கான ரூ.4.26 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு தெலுங்கானா அடிக்கல் நாட்டியது.
    • நிலகொண்டபள்ளி ஸ்தூபியானது 3 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது மற்றும் இது இந்தியாவின் மிகப்பெரிய புத்த ஸ்தூபிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  • ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற 19வது நகர்ப்புற போக்குவரத்து இந்திய (UMI) மாநாடு மற்றும் கண்காட்சி 2026 இல் டெல்லி-மீரட் நமோ பாரத் வழித்தடத்திற்கான சிறந்த பயணிகள் சேவை மற்றும் திருப்திக்கான விருதை தேசிய தலைநகர் பகுதிப் போக்குவரத்து கழகம் (NCRTC) வென்றது.
  • இந்தியா-இந்தோனேசியா கூட்டு சிறப்புப் படைகளின் 11வது பதிப்பான கருடா சக்தி பயிற்சி இந்தோனேசியாவின் பன்யுவாங்கியில் தொடங்கியது.
  • சத்தீஸ்கர் பொது இணையவழி வாக்கெடுப்பு மூலம் ஆரஞ்சு ஓக்லீஃப் (கல்லிமா இனச்சஸ்) எனும் பட்டாம்பூச்சியை தனது மாநில பட்டாம்பூச்சியாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) கடற்படை பொருட்கள் ஆராய்ச்சி ஆய்வகத்தால் (NMRL) உருவாக்கப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு காற்றைச் சாராத உந்து அமைப்பு (AIP) அமைப்பானது ஆற்றல் தொகுதி சோதனைக்கான பணி நிலை-2 இல் (STW-2) நுழைந்தது.
  • 3.2 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்தியாவின் மிகப்பெரிய ஆரம்ப பொது வெளியீட்டைத் (IPO) தொடர்ந்து, ரிலையன்ஸ் ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் 2026 ஆம் ஆண்டு அக்டோபர் 28 அன்று பங்குச் சந்தையில் அறிமுகமானது.
    • பட்டியலிடப்பட்ட நாளில் ஜியோ பங்குகள் 27% உயர்ந்தன, இது நிறுவனத்திற்கு சுமார் 137 பில்லியன் டாலர் மதிப்பீட்டை அளித்து இந்தியாவின் இரண்டாவது அதிக மதிப்புள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனமாக ஆக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்