TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 8 , 2026 10 days 83 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த கிளவுட் உள்கட்டமைப்பு நிறுவனமான Vultr, AMD Instinct MI355X கிராபிக்ஸ்/வரைகலை செயலாக்க அலகுகளால் (GPUs) இயக்கப்படும் 20 மெகாவாட் (MW) செயற்கை நுண்ணறிவு (AI) சூப்பர் கிளஸ்டரை/தொகுதிகளை சென்னையில் அறிமுகப்படுத்தியது.
  • இந்திய விமானப்படையின் 29-வது தலைமை தளபதியாக பொறுப்பேற்ற ஏர் மார்ஷல் அசுதோஷ் தீட்சித்துக்குப் பிறகு, ஏர் மார்ஷல் இந்தர்பால் சிங் வாலியா இந்திய விமானப்படையின் துணைத் தளபதியாக (VCAS) பொறுப்பேற்றார்.
  • டேராடூனைச் சேர்ந்த தொழில்நுட்பக் கல்வியாளர் பிரசாந்த் சவுத்ரி, ஊரக வளர்ச்சிக்கான சிறந்த பங்களிப்பிற்கான ஐந்தாவது ரோகிணி நய்யார் விருதை வென்றார்.
  • இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (GSI) 55-வது தலைமை இயக்குநராக திரு தினேஷ் விட்டல்ராவ் கன்வீர் பொறுப்பேற்றார்.
  • சண்டிகர் காவல்துறை தனது 60 ஆண்டு கால சேவையைக் குறிக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று நடைபெற்ற வைர விழா கொண்டாட்டங்களின் போது குடியரசுத் தலைவரின் வண்ண விருதைப் (President's Colour) பெற்றது.
  • சுனாமி ஆயத்த நிலை மற்றும் அபாயக் குறைப்பை ஊக்குவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 5 அன்று உலக சுனாமி விழிப்புணர்வு தினம் அனுசரிக்கப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Be Tsunami Ready: Resilience Starts with You என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்