TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 11 , 2026 6 days 104 0
  • நிர்மலா லட்சுமணன் எழுதிய The Tamils: A Portrait of a Community என்ற புத்தகத்திற்காக, சிறந்த சர்வதேச புனைகதை அல்லாத புத்தகத்திற்கான ஷார்ஜா விருதை வென்றார்.
  • இந்தியா மற்றும் அமெரிக்கா இடையேயான இருதரப்பு முப்படை மனிதநேய உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) பயிற்சியான 'டைகர் ட்ரையம்ப் 2026' இன் ஐந்தாவது பதிப்பு, விசாகப்பட்டினத்தில் உள்ள கடல்சார் போர் மையத்தில் தொடங்கியது.
  • 'மதர்ஸ் ஆஃப் கரேஜ்' (Mothers of Courage) என்ற ஆவணப்படம், படைப்பாற்றல் பிரிவில் 2026 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு இலக்குகள் (UN SDG) செயல் விருதை வென்றது.
  • 1895 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி வில்ஹெல்ம் கான்ராட் ராண்ட்ஜென் எக்ஸ்-கதிர்களைக் கண்டுபிடித்ததைக் குறிக்கும் வகையிலும், சுகாதாரத்துறையில் மருத்துவப் படமாக்கலின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச கதிரியக்கவியல் தினம் (IDoR) கொண்டாடப்படுகிறது.
    • 2026 ஆம் ஆண்டிற்கான கருத்துரு Upholding Patient Safety என்பதாகும்.
  • ஆரோக்கியமான மற்றும் வாழத்தகுந்த சமூகங்களை உருவாக்குவதில் நகர்ப்புற திட்டமிடலின் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 8 ஆம் தேதி உலக நகரமயமாக்கல் தினம் (உலக நகரமைப்புத் திட்டமிடல் தினம் என்றும் அழைக்கப்படுகிறது) அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்