TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 13 , 2026 3 days 84 0
  • டெல்லி-நொய்டா எல்லையில் உள்ள ஓக்லா பறவைகள் சரணாலயத்தில் அரிய வகை வெள்ளை நாரை (சிகோனியா சிகோனியா) காணப்பட்டது.
  • மும்பை-அகமதாபாத் அதிவேக ரயில் வழித்தடத்திற்காக வடிவமைக்கப்பட்டு, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 'பாரத் ரயில் கட்டுப்பாட்டு அமைப்பு' (BTCS) பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ள, இந்தியாவின் முதல் உள்நாட்டு புல்லட் ரயிலின் உற்பத்திப் பணிகளை பெங்களூரில் உள்ள பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் (BEML) நிறுவனத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
  • மாநிலத்தின் பாரம்பரிய கதைசொல்லும் கலையான வாரீ லீபாவை (Waree Leeba) பாதுகாத்து மேம்படுத்துவதற்காக, 2026 ஆம் ஆண்டின் முதலாவது வடகிழக்கு வாரீ லீபா திருவிழா மணிப்பூரின் இம்பால் மேற்கு மாவட்டத்தில் நடைபெற்றது.
  • நீர்நிலைகளை மீட்டெடுப்பதற்கான இணையவழி விண்ணப்பங்களை எளிதாக்கும் வகையில், 2026 ஆம் ஆண்டு நவம்பர் 10 அன்று 'ஏரி' (Eri) இணையதளத்தை தமிழ்நாடு முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
    • நீர்வளத் துறையால் (WRD) உருவாக்கப்பட்ட இந்த இணையதளம், ஐந்து அரசுத் துறைகளின் கீழ் உள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகளை பட்டியலிடுகிறது.
  • அசாம் மற்றும் மேகாலயாவில், கோல்ச்சிசாசியா (Colchicaceae) குடும்பத்தைச் சேர்ந்த டிஸ்போரம் காமகாசியன்ஸ் (Disporum kamakhasiense) என்ற புதிய பூக்கும் தாவர இனத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்