TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 15 , 2026 6 hrs 0 min 39 0
  • இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் பங்கேற்புடன் மலபார் 2026 கூட்டுப் பயிற்சி ஜப்பானில் தொடங்கியது.
  • இந்தியாவும் மியான்மரும் தங்களது முதலாவது இருதரப்பு முப்படை மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணப் (HADR) பயிற்சியான ‘ரஹத் மித்ரா’ (RAHAT MITRA) பயிற்சியை தமிழ்நாட்டின் சென்னையில் நடத்தின.
  • இந்தியக் கடற்படை மற்றும் ஓமன் ராயல் கடற்படை ஆகியவற்றுக்கு இடையிலான ‘நசீம் அல் பஹ்ர்’ (Naseem Al Bahr) இருதரப்பு கடற்படைப் பயிற்சியின் 15-வது பதிப்பு ஓமனில் நடைபெற்றது.
  • பிரிட்டிஷ் எழுத்தாளர் எம். ஜான் ஹாரிசன் தனது ‘தி எண்ட் ஆஃப் எவ்ரிதிங்’ (The End of Everything) என்ற அறிவியல் புனைகதை நாவலுக்காக 2026 ஆம் ஆண்டிற்கான புனைகதைக்கான புக்கர் பரிசை வென்றார்.
  • உக்ரைனுக்குப் போருக்குப் பிந்தைய பாதுகாப்பு ஆதரவை வழங்குவதற்குத் தயாராகும் வகையில், 11 நாடுகளைச் சேர்ந்த சுமார் 2,800 வீரர்களுடன் ‘கோலிஷன் ஆஃப் தி வில்லிங்’ (Coalition of the Willing) அமைப்பு தனது முதலாவது பெரிய பன்னாட்டு இராணுவப் பயிற்சியான ‘கோலிச்ஜா 26.2’ (KOALICJA 26.2) பயிற்சியை போலாந்தில் நடத்தியது.
  • மக்களிடையே கருணை மற்றும் இரக்கத்தை ஊக்குவிப்பதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 13 அன்று உலக கருணை தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்