TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 15 , 2018 2562 days 849 0
  • உலகின் மிகப்பெரிய அரபு ஒலி நூலகமான துபாய் ஒலி நூலகத்தை துபாயின் இளவரசரான ஷேக் ஹம்டன் பின் முகமது பின் ரஷீத் அல் மக்டோம் தொடங்கி வைத்தார்.
    • இது Bookshare.org வலைதளத்துடன் இணைந்து துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் மேற்கொண்ட முன்முயற்சியாகும்.
  • இந்த வருடம் வெளிநாடுவாழ் இந்தியர்களால் 80 பில்லியன் டாலர் தாய்நாட்டிற்கு அனுப்பியதுடன் இந்தியாவானது உலகின் மிக அதிக அளவில் வெளிநாடுகளிலிருந்து பணம் பெறும் முதல் நாடாக இவ்வருடமும் தனது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியாவைத் தொடர்ந்து சீனா, மெக்ஸிகோ, பிலிப்பைன்ஸ் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் உள்ளன.
  • முதன் முறையாக கத்தாரை முந்தி உலகின் முன்னணி திரவ இயற்கை எரிவாயு (LNG – Liquified Natural Gas) ஏற்றுமதியாளராக ஆஸ்திரேலியா ஆகியுள்ளது.
    • நிலக்கரி மற்றும் இரும்புத் தாது ஆகியவற்றிற்கு அடுத்ததாக LNG ஆனது ஆஸ்திரேலியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி பொருளாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்