TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 20 , 2019 2367 days 757 0
  • தமிழ்நாட்டின் குன்னூரில் புதிய வைரஸ் தடுப்பு மருந்து உற்பத்தி அலகு ஒன்றை அமைப்பதற்காக இந்திய பாஸ்டர் நிறுவனத்திற்கு (Pasteur Institute of India - PII) நிலத்தை ஒதுக்குவதற்கான பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • துணைக் கடற்படைத் தலைவரான எஸ்.என். கர்மேடு விசாகப்பட்டினத்தின் கிழக்குக் கடற்படைப் படைப் பிரிவின் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றார்.
  • அமைப்புசாரா துறையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான “பிரதான் மந்திரி ஷரம் யோகி மந்தன் யோஜனா” என்ற திட்டத்தை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 அன்று மத்திய நிதி அமைச்சகம் தொடங்கி வைத்தது.
  • கிரேட்டர் சிம்லா பகுதியில் வாழும் மக்களுக்கு நம்பத் தகுந்த மற்றும் தூய்மையான குடிநீர் கிடைக்கப் பெறுவதற்கு உதவுவதற்காக ரூ.40 மில்லியன் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் ஒன்றில் இந்திய அரசாங்கம், இமாச்சலப் பிரதேச அரசு மற்றும் உலக வங்கி ஆகிய மூன்றும் கையெழுத்திட்டுள்ளன.
  • உலக காது கேட்புத் திறன் தினத்தை (மார்ச் 3) முன்னிட்டு, திறன் பேசிகள் உள்ளிட்ட இசைக் கருவிகளின் தயாரிப்பு மற்றும் பயன்பாடு தொடர்பான ஒரு புதிய சர்வதேசத் தரத்தினை உலக சுகாதார நிறுவனம் மற்றும் சர்வதேச தொழிற் சங்கம் (International Trade Union) ஆகியவை இணைந்து வெளியிட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்