TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 19 , 2019 2661 days 1181 0
  • மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகமானது “தீக்சை ஆரம்பம்” என்ற ஒரு மாணவர் ஊக்குவிப்புத் திட்டம் மீதான பல்கலைக் கழக மானியக் குழுவின் (University Grants Commission) வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.
    • இது வழக்கமான வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு, புதிய மாணவர்கள் கல்வி நிறுவனத்திற்குள் வந்தவுடன், அவர்களுடன் இணைந்து செயல்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சர்வதேச கிரிக்கெட் ஆணையமானது  (International Cricket Council – ICC) இந்தியாவின் பேட்டிங் வீரரான சச்சின் டெண்டுல்கர், தென் ஆப்பிரிக்க அணியின் ஆலன் டொனால்டு மற்றும் இருமுறை உலகக் கோப்பையை வெல்வதற்குக் காரணமாக இருந்த ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி வீரர் கேத்திரின் பிட்ஸ்பாட்ரிக் ஆகியோரை ICCன் வாழ்த்தரங்க பட்டியலில் (Hall of Fame) இணைத்துள்ளது.
    • பிஷன் சிங் பேடி, சுனில் கவாஸ்கர், கபில் தேவ், அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் இப்பட்டியலில் உள்ள இதர இந்திய வீரர்களாவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்