TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 24 , 2019 2182 days 983 0
  • கோபிச் செட்டிப் பாளையத்தில் உள்ள வைர விழா உயர்நிலைப் பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராகப் பணியாற்றும் எம்.மன்சூர் அலி மற்றும் கரூரில் உள்ள க.பரமத்தியின்  ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றும் R.செல்வக் கண்ணன் ஆகியோர் 2018 ஆம் ஆண்டின் தேசிய நல்லாசிரியர் விருதுக்காகத் தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • காற்றாலை மின் திட்டங்களுக்காக மெகா வாட் ஒன்றிற்கு ரூ.30,000 என்ற வாடகை நிலையை தளர்த்த அல்லது நீக்க மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவ நிலை மாற்ற அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
  • மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை இணையமைச்சரான (தனிப் பொறுப்பு) பிரகலாத் சிங் படேல் “மனு காந்தியின் குறிப்புகள் (நாட்குறிப்பு) (1943-44)” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
    • இந்தப் புத்தகமானது ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக அச்சகத்துடன் இணைந்து இந்திய தேசியக் காப்பகத்தினால் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினக் கொண்டாட்டத்தின் போது வெளியிடப்பட்டது.
  • போர்ப்ஸ் பத்திரிக்கையின் 2019 ஆம் ண்டில் அதிக ஊதியம் பெறும் நடிகர்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்சய் குமார் 4வது இடத்தைப் பிடித்துள்ளார். இவர் 65 மில்லியன் டாலரை ஊதியமாகப் பெற்றுள்ளார். இப்பட்டியலில் டிவைன் ராக் ஜான்சன் முதலிடத்தில் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்