TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 19 , 2019 2135 days 971 0
  • உத்தரகாண்ட் மாநில அரசு 3 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் சமஸ்கிருத மொழியைக்  கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது.
    • உத்தரகாண்ட் மாநிலத்தின் முக்கிய பிராந்திய மொழிகளான குமாவோனி மற்றும் கர்வாலி ஆகிய மொழிகளுக்கு யுனெஸ்கோவால் “அழிந்து வரும் நிலையில் உள்ள மொழிகள் ”  என்ற அந்தஸ்து வழங்கப் பட்டுள்ளது.
  • ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கிருஷ்ணா முராரி, இமாச்சலப்  பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி வி.ராமசுப்பிரமணியன், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ரவீந்திர பட், கேரள உயர் நீதிமன்றத்  தலைமை நீதிபதி ஹிருஷிகேஷ் ராய் ஆகியோர் இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
    • உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 34 ஆகிறது. இது இன்று வரை அதிகபட்ச நியமனமாகும்.
  • 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த பூமிஸ்பர்ஷா முத்ராவில் அமர்ந்த நிலையில் இருக்கும்  புத்தரின் வெண்கல சிலை 1961 ஆகஸ்ட் 22 அன்று நாலந்தா அருங்காட்சியகத்தின் இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தில் இருந்து  திருடப்பட்டது. அது தற்போது ஐக்கியப் பேரரசால் இந்தியாவிற்குத் திருப்பி அளிக்கப் பட்டது.
  • அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக ராபர்ட் ஓ’பிரையன் நியமிக்கப்பட்டுள்ளார். ராபர்ட் ஓ’பிரையன் ஜான் போல்டனை அடுத்து அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவார்.
  • பெங்களூருவில் நடந்த இறுதிப் போட்டியில் இந்தியா ரெட் அணியானது  இந்தியா கிரீன் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 38 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து துலீப் டிராபி போட்டியின் 58வது சீசனை வென்றது.
    • இந்தியா ரெட் அணிக்காக 153 ரன்கள் எடுத்த அபிமன்யு ஈஸ்வரன் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்