TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 1 , 2018 2846 days 1078 0
  • நடப்பில், பெரு நாட்டிற்கான இந்திய தூதராகப் பணியாற்றி வரும் 1994 ஆண்டின் இந்திய அயலுறவுப் பணி அதிகாரியான சுப்பாராயுடு அப்பணியோடு சேர்த்து கூடுதலாக, பொலிவியா நாட்டிற்கான அடுத்த இந்திய தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மாநிலத்தின் அதிகாரப்பூர்வ மொழியான உருதுவை (Official Language of the State) மேம்படுத்துவதற்கான முயற்சியாக ஜம்மு காஷ்மீர் மாநிலம் உருது மொழி மேம்பாட்டிற்காக முதல் முறையாக மாநிலக் குழுவை அமைத்துள்ளது.
  • இந்திய தொழில் கூட்டமைப்பின் மூன்றாவது கூட்டிணைவு மாநாடு (Third Partnership Summit) விசாகப்பட்டினத்தில் நடத்தப்பட்டது. இந்த மாநாடு இந்திய தொழில் கூட்டமைப்பால், தொழில்துறை கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறை (Department of Industrial Policy and Promotion), இந்திய அரசு மற்றும் ஆந்திரப் பிரதேச மாநில அரசு ஆகியவற்றின் கூட்டிணைவோடு (Partnership) நடத்தப்பட்டது.
  • மைக்கேல் மெக்கார்மக் (Michael McCormack) ஆஸ்திரேலியாவின் புதிய துணைப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் துணைப்பிரதமர் பார்நேபி ஜாய்ஸ்க்குப் பதிலாக (Burnaby Joyce) நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்