November 14 , 2020
1704 days
725
- அமெரிக்க அதிபரான ஜே பிடன் அவர்கள் டாக்டர் விவேக் மூர்த்தி என்பவரை கோவிட் -19 பணிக் குழுவிற்குத் தலைவராக நியமித்துள்ளார்.
- டாக்டர் விவேக் மூர்த்தி இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு நபராவார்.
- இந்தியாவானது பிரிக்ஸ் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் முதலாவது சந்திப்பில் கலந்து கொண்டது.
- இந்தச் சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப் படுத்தினார்.
- இந்தியாவின் மிக நீளமான ஒற்றைவழி இயக்கத் தொங்கு பாலம் உத்தரகாண்ட்டின் டெஹ்ரி-கார்வால் மாவட்டத்தில் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
- டெஹ்ரி ஏரியின் மீது கட்டப் பட்டுள்ள இந்தப் பாலமானது 725 மீட்டர் நீளம் உடையது.
- அசாமின் தேஸ்பூர் லிட்சிக்கு புவிசார் குறியீடானது வழங்கப் பட்டுள்ளது.
- உலகக் கருணை தினமானது நவம்பர் 13 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
Post Views:
725