பாதுகாப்புப் படைகள், அரசுத் துறைகள் மற்றும் குடிமை நிறுவனங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை அதிகரிக்கும் வகையில், அசாமின் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள லைபுலி எனுமிடத்தில், சமன்வய் சக்தி 2025 என்ற பயிற்சி தொடங்கப்பட்டது.
நவி மும்பையில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுக அறக்கட்டளை (JNPT) மற்றும் பால்கரில் உள்ள வாதவன் துறைமுகம் இடையே ஹைப்பர் லூப் எனும் அதிவேகப் போக்குவரத்து அமைப்பு மூலமான சரக்கு வழித்தடத்தினை இயக்க உள்ள உலகின் முதல் பிராந்தியமாக மகாராஷ்டிரா மாநிலம் மாற உள்ளது.