TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 8 , 2018 2860 days 1159 0
  • சத்தீஸ்கர் மாநிலத்தின் பிஜப்பூரில் நடைபெற்ற அம்பேத்கர் ஜெயந்தி (ஏப்ரல் 14) விழா கொண்டாட்டத்தின் போது பழங்குடியினர் விவகாரங்கள் அமைச்சகம் மற்றும் இந்திய பழங்குடியினர் கூட்டுறவு சந்தையிடல் மேம்பாட்டுக் கூட்டமைப்பு ஆகியவற்றின் திட்டமான வன் தன் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் பிரதமர் பிஜப்பூரில் முதல் மாதிரி வன் தன் விகாஸ் கேந்திராவைத் தொடங்கிவைத்தார்.
  • இந்தியாவின் மிகப் பெரிய அவுட்சோர்சிங் நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்  100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை அடைந்துள்ளது. இதன் மூலம் 100 பில்லியன் டாலர் சந்தை மூலதனத்தை அடைந்த முதல் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம் என்ற வரலாற்றைப் படைத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்