TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 11 , 2018 2778 days 1128 0
  • இந்திய அமெரிக்கரான தீபா அம்பேத்கர் நியூயார்க் நகரத்தில் உள்ள சிவில் நீதிமன்றத்தின் இடைக்கால நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சென்னையைச் சேர்ந்த ராஜராஜேஸ்வரி என்ற இந்திய அமெரிக்கர் நீதிபதியாக அந்நகரத்தில் நியமிக்கப்பட்டதற்குப் பிறகு நியமிக்கப்பட்ட இரண்டாவது இந்தியர் ஆவார்.
    • 2015-ஆம் ஆண்டில் ராஜராஜேஸ்வரி குற்றவியல் நீதிமன்றத்தின் நடுவராக நியமிக்கப்பட்டார். இவ்வகையில் இந்தியாவில் பிறந்த பெண், நியூயார்க் நகரத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டதே முதல் முறையாகும்.
  • பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த சிவாக்ஸ் ஜல் வஜிப்தார் பதவியிலிருந்து ஓய்வு பெற்றதன் காரணமாக நீதிபதி அஜய் குமார் மிட்டல் இடைக்கால தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • சிக்கிமில் உள்ள பாக்யாங் விமான நிலையம், ஜுன் மாதத்தில் துவக்கி வைக்கப்படும் போது, நாட்டின் 100-வது செயல்படும் விமான நிலையமாக உருவெடுக்க உள்ளது. நாட்டில் சிக்கிமில் மட்டுமே இதுவரையில் விமான நிலையம் இல்லாமல் இருந்தது.
  • விம்பிள்டன் அதிகாரிகள் கூறியவரையில் 2019-ஆம் ஆண்டிற்கான ஆடவர் மற்றும் மகளிர் போட்டிக்கான வெற்றியாளர்கள் கடந்த ஆண்டைக் காட்டிலும் 50000 பவுண்டுகள் அதிகமாக, அதாவது25 மில்லியன் பவுண்டுகள் என்ற அளவில் பரிசுத் தொகையினை பெறுவர்.
    • விம்பிள்டன் போட்டியில் கீழ்வரிசை போட்டியாளர்கள் தகுதி பெறும் நிலையிலிருந்து ஒற்றையர் போட்டிகளில் முதல் சுற்று முதல் நான்காம் சுற்று வரை 10 சதவிகித அதிகரிப்புத் தொகை மூலம் மிகுந்த ஊக்கத்தினை பெறுவர். இதன் மூலம் இந்த வருடத்திற்கான ஒட்டுமொத்தப் பரிசுத் தொகை 34 மில்லியன் பவுண்டுகளாக உயரும்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டரஸ் மியான்மருக்கான தனது சிறப்புத் தூதராக சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த கிறிஸ்டைன் ஸ்காரனர் பர்ஜனரை நியமித்துள்ளார். இதற்கு முன்பு திருமதி. பர்ஜனர் ஜெர்மனி நாட்டிற்கான சுவிட்சர்லாந்தின் தூதராக 2015 முதல் இருந்து வந்தார்.
  • முன்னாள் ஜம்மு-காஷ்மீர் மாநில சபாநாயகர் கவிந்தர் குப்தா அம்மாநிலத்தின் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். தற்போது துணை முதல்வராக உள்ள பா.ஜ.க-வைச் சேர்ந்த நிர்மல் சிங் புதிய சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள நிர்மல் சிங்கிற்குப் பதிலாக கவிந்தர் குப்தா துணை முதல்வராக பதவியேற்பார்.
  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மணிப்பூரின் ஆளுநராக உள்ள நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிகாலம் முடிவடைந்ததை அடுத்து அசாம் ஆளுநரான ஜகதீஷ் முகியை மணிப்பூரின் பொறுப்பு ஆளுநராக நியமித்துள்ளார்.
  • நியமனங்களுக்கான அமைச்சரவைக் குழு, முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகரான அசோக் லாகிரியை 15-வது நிதிக் குழுவின் முழுநேர உறுப்பினராக நியமித்துள்ளது. இவர் தற்சமயம், N.K. சிங் தலைமையிலான நிதிக் குழுவில் பகுதிநேர உறுப்பினராக உள்ளார்.
  • ஆப்கான் அரசு அதிகாரப்பூர்வமாக மின்னணு அடையாள அட்டைகளை அல்லது இ-தாஸ்கிரா (e-Tazkira) என்பதனை விநியோகிக்கத் தொடங்கியுள்ளது. இந்த இ-தாஸ்கிரா சிறந்த நிர்வாகத்தையும், பொருளாதாரத் திட்டமிடுதலையும் மேம்படுத்தி அனைத்து குடிமக்களுக்கும் சிறந்த பொது சேவைகளை வழங்கிட ஆப்கானிஸ்தான் அரசிற்கு உதவிடும்.
  • இறகுப்பந்து வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆந்திரப் பிரதேசத்தின் துணை ஆட்சியராக முறையாகப் பொறுப்பேற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்