TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 29 , 2018 2959 days 1252 0
  • உடான் திட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசத்தின் முதல் வர்த்தக விமானமானது (அல்லையன்ஸ் ஏர்லைன்ஸின் 42 இருக்கைகள் உடைய ATR விமானம்) பசிகாட் விமான நிலையத்தில், அதாவது கிழக்கு சியாங் மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட இறங்கு தளத்தில் தரையிறங்கியுள்ளது.
  • பார்சிலோனாவின் முன்கள ஆட்ட வீரரான லியோனல் மெஸ்ஸி லா லிகா போட்டியில் கட்டாலன் தரப்பிற்காக 34 கோல்கள் அடித்தமைக்காக ஐந்தாவது முறையாக ஐரோப்பாவின் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமைக்கு உள்ளாக்கப்பட்டார். நான்கு முறை இந்த விருதை கடந்த காலங்களில் வென்றவரும் மெஸ்ஸியின் போட்டியாளருமான கிறிஸ்டியானா ரொனால்டோ லா லிகாவில் 26 கோல்கள் மட்டுமே அடித்தார். லிவர்பூல் அணியின் முகமது சாலஹ் இந்த பட்டியலில் 32 கோல்களுடன் 2வது இடத்தில் உள்ளார்.
  • நிதி ஆயோக் அமைப்பு தொழிற்முனைவோரும் ஊடக புகழ்வாய்ந்தவருமான சுஷாந்த் சிங்குடன் தனது பெண் தொழிற்முனைவோர் நடைமுறை திட்டத்தின் (Women Entrepreneurship Platform) ஆதரவுக்காக அவருடன் இணைந்து ஒப்பந்தத் தீர்மானம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்