TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 14 , 2022 1269 days 657 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (IRDAI) புதிய தலைவராக தேபாசிஷ் பாண்டா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • இவர் ஒரு முன்னாள் நிதிச் சேவைச் செயலர் ஆவார்.
  • மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் நாராயண் ரானே மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான புதுமையான திட்டம் (பாதுகாப்பு, வடிவமைப்பு மற்றும் அறிவுசார் சொத்துரிமை) மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் ஐடியா ஹேக்கத்தான் 2022 ஆகியவற்றைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
    • இந்தத் திட்டங்கள் தொழில்முனைவோருக்குப் புதிய தொழில்களைத் தொடங்க உதவும் என்று அவர் கூறினார்.
  • அசாம் மாநிலத்தில் 1958 ஆம் ஆண்டு ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரங்கள்) சட்டத்தினை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
    • இந்த அறிவிப்பு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்