TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 25 , 2023 757 days 554 0
  • ஒன்றிய கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறையானது, போதிய சேவைப் பயன்களைப் பெறாத கால்நடைத் துறையில் நிதி வழங்கீட்டிற்கான ஒரு மேம்பட்ட அணுகலை கிடைக்கச் செய்வதற்காக நன்கு உறுதியளிக்கப்பட்ட கடன் வசதியினை வழங்குவதற்காக கடன் உத்தரவாத நிதி அறக்கட்டளையை நிறுவியுள்ளது.
  • குஜராத் அரசானது, குஜராத்தின் மெஹ்சானா எனுமிடத்தில் இந்தியாவின் முதலாவது, ‘செயற்கைக்கோள் வலையமைப்பு இணைய தளத்தை’ உருவாக்குவதற்காக ஒன்வெப் இந்தியா கம்யூனிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மேற்கொண்டுள்ளது.
  • இந்திய அறிவியலாளர்கள் ஒரு இயக்கச் செயல்பாட்டின் போது ஏற்படும் சிதைவு குறித்தச் சவால்களைச் சமாளிக்க உதவும் ஒரு சிறந்த வெப்ப மற்றும் ஈரப்பத நிலைத் தன்மையும், அதிக நிலைப்புத் தன்மையும் கொண்ட, ஒரு விலை மலிவான கார்பன் அடிப்படையிலான பெரோவ்ஸ்கைட் என்ற வகை சூரிய மின் உற்பத்தி அலகுகளை உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளனர்.
  • மகாராஷ்டிராவில் உள்ள லவாசா எனப்படும் இந்தியாவின் முதல் தனியார் மலைவாழ் பகுதியினை டார்வின் பிளாட்ஃபார்ம் உள்கட்டமைப்பு நிறுவனத்திடம் 1,800 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்வதற்குத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) அனுமதி அளித்துள்ளது.
  • நுஸ்ரத் சவுத்ரி அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்