TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 23 , 2018 2571 days 879 0
  • ஜம்மு காஷ்மீரின் தலைமை வழக்கறிஞராக இருந்த ஜஹாங்கீர் இக்பால் கனாய்-க்குப் பதில் டி.சி.ரெய்னாவை புதிய தலைமை வழக்கறிஞராக அம்மாநில ஆளுநர் என்.என்.வோரா நியமித்துள்ளார்.
    • ஜம்மு காஷ்மீரில் 2016-ல் ஆளுநர் ஆட்சியின் போது ரெய்னா அரசின் தலைமை வழக்கறிஞராக பணியாற்றினார்.
  • ரோமா அணியிலிருந்து லிவர்பூல் அணிக்கு மாறிய பிரேசிலின் கோல்கீப்பர் அலிசன் பெக்கர் உலகின் மிகவும் விலையுயர்ந்த கோல்கீப்பர் ஆவார். இதற்கு முன் லோரிஸ் குனிஸ் உலகின் மிகவும் விலையுயர்ந்த கோல்கீப்பராக இருந்தார்.
    • உலகில் மிகவும் விலையுயர்ந்த தடுப்பு ஆட்டக்காரராக லிவர்பூல் அணியைச் சேர்ந்த விர்ஜில் வன் டிஜிக் உள்ளார். ஜனவரியில் இவருடைய மதிப்பு $99 மில்லியன் ஆகும்.
  • மிகப்பெரிய சமூக ஊடகம் அமெரிக்க பெடரல் தொடர்பு ஆணையத்திடம் பாயிண்ட்வியூ டெக் எல்எல்சி என்ற பெயர் கொண்ட திட்டத்தின் விண்ணப்பத்தை பதிவு செய்துள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் உலகம் முழுவதும் இதுவரை சேவையளிக்கப்படாத பகுதிகள் மற்றும் பகுதியளவு சேவையளிக்கப்பட்டுள்ள பகுதிகள் ஆகியவற்றிற்கு பிராண்ட் பேண்ட் சேவையை வழங்குவதாகும்.
    • 2019ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இணையதள சேவை செயற்கைக் கோளான ‘ஏதேனா ‘விண்ணில் செலுத்தப்படவிருக்கிறது.
  • மிசோராமின் அஸ்வாலின் தெங்கத்துமா அரங்கில் மிசோரமின் முதலாவது சர்வதேசத் திருவிழாவான ‘மிசோ ஹனக்தலாக்’ ஏற்பாடு செய்யப்பட்டது. இத்திருவிழாவின் நோக்கம் ஒரே குடையின் கீழ் மிசோ இன சமுதாயம் சமூகம் மற்றும் கலாச்சார நிலையில் ஒன்று கூடுதலாகும்.
  • இமாச்சலப் பிரதேச மாநில அரசானது ஆப்பிள் கொள்முதலுக்கான சந்தை இடையீட்டுத் திட்டத்தை செயல்படுத்துதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. இத்திட்டம் 2018ஆம் ஆண்டு ஜூலை 20 முதல் அக்டோபர் 31 வரை செயல்படுத்தப்பட இருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்