TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 20 , 2024 577 days 431 0
  • சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனமானது, மின்சார வாகனம் குறித்த ஆராய்ச்சி மற்றும் உருவாக்கச் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான ஒரு ஆய்வகத்தினைத் தொடங்குவதற்காக அல்டேர் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது.
  • திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள 42 மீனவக் கிராமங்கள் அமைந்த கடற்கரையில் செயற்கைப் பவளப் பாறைகள் அமைக்கும் பணி சமீபத்தில் தொடங்கியது.
    • இந்தத் திட்டமானது மீன் வளத்தைப் பெருக்கச் செய்வதற்கும் நிலையான மேலாண்மையினை மேம்படுத்துவதற்காகவும் தொடங்கப்பட்டுள்ளது.
  • ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஆனது, பிறந்த தேதிக்கான (DOB) ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடிய ஆவணங்களின் பட்டியலில் இருந்து ஆதார் அட்டையை நீக்கியுள்ளது.
  • டி20 கிரிக்கெட் சர்வதேசப் போட்டிகளில் அதிக சதம் அடித்த வீரர்கள் பட்டியலில் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோரை ரோஹித் சர்மா (5) விஞ்சி உள்ளார்.
  • ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ள WT20I போட்டியின் போதான இருதரப்புத் தொடரில் இடம் பெற உள்ள, சர்வதேச கிரிக்கெட் சபையினால் நியமிக்கப் பட்ட முதல் பெண் நடுநிலை (மூன்றாம் நாட்டைச் சேர்ந்த) நடுவர் என்ற பெருமையினை இங்கிலாந்தின் சூயு ரெட்ஃபெர்ன் பெற்று உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்