TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 21 , 2024 26 days 121 0
  • சித்திரகூட்டில் உள்ள துளசி (ஷபரி) நீர்வீழ்ச்சியில் அமைக்கப்பட்டுள்ள உத்தரப் பிரதேசத்தின் முதல் கண்ணாடியினாலான நடைமேம்பாலம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
  • பேராசிரியர் ராமன் மிட்டல் மற்றும் பேராசிரியை சீமா சிங் ஆகியோர் “Law and Spirituality: Reconnecting the Bond” என்ற புத்தகத்தினைத் தொகுத்துள்ளனர்.
  • இந்திய ரிசர்வ் வங்கியானது, வெளிநாட்டுச் சந்தைகளில் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்திற்கு எதிராக இந்தியர்கள் தங்கள் இழப்புக் காப்பு முதலீட்டு (ஹெட்ஜிங்) உத்திகளைப் பன்முகப்படுத்த உதவும் வகையில் ஒரு குறிப்பிடத் தக்க கொள்கை திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.
  • அமிதாப் பச்சனுக்கு 2024 ஆம் ஆண்டிற்கான லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இஸ்ரோ நிறுவனமானது, ஏவுகல இயந்திரங்களுக்கான இலகுரக கார்பன்-கார்பன் (C-C) குழல் முனையை உருவாக்கியுள்ளது என்ற நிலையில் இது ஏவுகல இயந்திர தொழில் நுட்பத்தில் ஒரு திருப்புமுனை மிக்க கண்டுபிடிப்பு என்று கூறப்படுகிறது.
  • இமாச்சலப் பிரதேச கிரிக்கெட் சங்க (HPCA) மைதானம் ஆனது, அதிநவீன 'கலப்பு வகை ஆடுகளத்தினை' அமைக்க BCCI அமைப்பால் அனுமதியளிக்கப்பட்ட முதல் மைதானமாக மாறியுள்ளது.
  • இருபது ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பில் இருந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங், மே 15 ஆம் தேதியன்று பதவி விலகுவதையடுத்து, அவரது பிரதிநிதி லாரன்ஸ் வோங்கிடம் அவர் அதிகாரத்தை ஒப்படைக்க உள்ளார்.
  • நடிகைக்குப் பணப்பட்டுவாடா செய்த வழக்கில் குற்றவியல் விசாரணையை எதிர் கொள்ளும் முதல் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆவார்.
  • மனிதர்களின் குரல் மற்றும் குரல் ஒலி ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 16 ஆம் தேதியன்று உலக குரல் தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்