TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 23 , 2024 10 days 92 0
  • இந்தியா 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஆர்க்டிக் பகுதிக்கான தனது முதல் குளிர்கால ஆய்வுப் பயணத்தினை நிறைவு செய்த நிகழ்வானது, அதன் ஆர்க்டிக் ஆய்வு முயற்சிகளில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.
  • கடற்படை துணைத் தளபதி தினேஷ் குமார் திரிபாதி அடுத்த கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, "உள்நாட்டிலேயே உருவாக்கப் பட்ட நீண்ட தூர வரம்புடைய குறையொலி சீர்வேக எறிகணையின்" ஏவுதல் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டது.
  • குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரைச் சேர்ந்த ஆறு வயது சிறுமி தக்ஷ்வி வகானி 25 மீட்டர் தூரம் குறைந்த உயரத்தில் (16.5 செ.மீ.) லிம்போ ஸ்கேட்டிங் செய்து (கிடை மட்ட அளவிலான) கின்னஸ் உலக சாதனையினைப் படைத்துள்ளார்.
  • எதிர்காலத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு ஒரு விண்கலத்தைச் சுமந்துச் செல்லக்கூடிய சுழலும் வகையிலான வெடிப்பு முறையில் தூண்டுவிக்கப்படும் எந்திரம் (RDRE) எனப் படும் புதிய வகை ஏவு கல இயந்திரத்தை நாசா வெற்றிகரமாகப் பரிசோதித்துள்ளது.
  • சூடான் மற்றும் அண்டை நாடுகளுக்கான சர்வதேச மனிதாபிமான மாநாடு ஆனது பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்