TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 26 , 2024 9 days 114 0
  • இன்டெல் நிறுவனமானது, மனித மூளையின் பல்வேறு செயல்பாடுகளை பின்பற்றும் செயல்முறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் காட்டும் உலகின் மிகப்பெரிய நியூரோமார்பிக் (நரம்பியல் மண்டல அமைப்பினை ஒத்த) ஹாலா பாயிண்ட் எனும் கணினியினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தோனேசியாவின் வெளிப்புற பகுதியின்  அமைந்துள்ள ஒரு தொலைதூர எரிமலை சமீபத்தில் மீண்டும் வெடித்துள்ளது.
  • ரியூட்டர்ஸ் நிறுவனத்தின் புகைப்படக்கலைஞர் முகமது சலேம், காசா பகுதியில் தனது உறவினரின் ஐந்து வயது மகளின் உடலைக் கட்டித் தழுவியவாறு அமர்ந்து இருக்கும் பாலஸ்தீனப் பெண்ணின் புகைப்படத்திற்காக 2024 ஆம் ஆண்டின் மதிப்பு மிக்க உலக பத்திரிகைப் புகைப்படத்திற்கான விருதை வென்றுள்ளார்.
  • புகழ்பெற்ற தொழிலதிபரும் புரவலருமான ரத்தன் டாடா அவர்களுக்கு, 2021 ஆம் ஆண்டிற்கான மதிப்புமிக்க KISS மனிதாபிமான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் நிதியாண்டில், வேலைப்பாடுகள் இல்லாத தங்க ஆபரணங்களின் ஏற்றுமதியில் இந்தியா குறிப்பிடத்தக்க எழுச்சியைக் கண்டுள்ளது.
    • முந்தைய நிதியாண்டில் 4,199.96 மில்லியன் டாலராக இருந்த இது 61.72% அதிகரித்து 6,792.24 மில்லியன் டாலராக உயர்ந்துள்ளது,

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்