TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 28 , 2024 19 days 99 0
  • பருவநிலை மாற்றம் மற்றும் அதன் தீய விளைவுகள் பற்றிய விழிப்பு உணர்வைப் பரப்புவதற்காக இந்தியாவின் மிகப்பெரிய பருவநிலை கணிப்பு கடிகாரத்தினை அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி சபையானது (CSIR) புது டெல்லியில் உள்ள அதன் தலைமையகக் கட்டிடத்தில் நிறுவி செயல் படுத்தியது.
  • இந்தியாவின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது, சீனா கைபேசிச் சேவை நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி, தரவு ஓட்டப் பயன்பாட்டில் உலகின் மிகப் பெரியக் கைபேசிச் சேவை இயக்க நிறுவனமாக மாறியுள்ளது.
  • 1975 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் தேதியன்று இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ஆன ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்டதன் 50 வது ஆண்டு நிறைவினைக் குறிக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டு செயற்கைக்கோள் தொழில்நுட்ப தினம் அனுசரிக்கப்பட்டது.
  • இந்தியாவில் அதிக சர்க்கரை (2.7 கிராம்) அளவுகள் கொண்ட குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் நெஸ்லே குழுமத்திற்கு எதிராக "தகுந்த நடவடிக்கை" எடுக்குமாறு இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தினை (FSSAI) மத்திய அரசு கோரியுள்ளது.
  • ICC ஆடவர் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கான அதிகாரப்பூர்வ தூதராக பழம்பெரும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இங்கிலாந்தில் உள்ள ஐக்கியப் பேரரசின் பிரிக்ட்டன் மற்றும் ஹோவ் சிட்டி சபையானது, இரண்டு உலகப் போர்களில் பங்கேற்ற இந்திய வீரர்களின் பங்கை நினைவு கூரும் வகையில் இந்த ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் ஆண்டுதோறும் பல்வேறு சமயச் சார்புள்ள நிகழ்வுகளை அந்நகரின் இந்தியா கேட் நினைவிடத்தில் நிகழ்த்த முடிவு செய்துள்ளது.
  • கூகுளின் டீப் மைண்ட் மற்றும் ஸ்டான்ஃப்போர்ட் பல்கலைக்கழக அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் மொபைல் ALOHA எனப்படும் குறைந்த விலையிலான, அனைவரும் அணுகும் வகையிலான, கைகளால் இயக்கக்கூடிய தொலை இயக்க வன்பொருள் அமைப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.
    • ஒரு மனித உருவத்திலான எந்திரமான இது ஒரு பயனரால் தொலை இயக்கி மூலம் இயக்கப்படும் மாதிரியாக்கக் கற்றல் மூலம் ஒரு சுயமானச் முறையில் செயல்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்