TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 29 , 2024 18 days 85 0
  • "இந்திய உளவியலின் தந்தை" எனப்படும் சுதிர் காக்கர் சமீபத்தில் காலமானார்.
  • 26வது உலக எரிசக்தி மாநாடானது நெதர்லாந்தின் ரோட்டர்டாம் நகரில் நடத்தப் பட்டது.
  • பத்து பலதரப்பு மேம்பாட்டு வங்கிகளின் (MDBs) கூட்டணியானது, மேம்பாட்டின் நிலை மற்றும் தாக்கத்திற்கு கூடுதல் மூலதனத்தை வழங்குவதற்காக வேண்டி "உலக ஒத்துழைப்பிலான இணை நிதியுதவி" என்ற புதிய இணை-நிதியளிப்புத் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நடிகர் ரன்தீப் ஹூடா இந்தியத் திரைத்துறைக்கு ஆற்றியப் பெரும் பங்களிப்பினைப் பாராட்டி லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு ASEAN எதிர்கால மன்றத்தின் (AFF 2024) இரண்டாவது முழு நிறைவான அமர்வானது வியட்நாமின் ஹனோய் நகரில் நடைபெற்றது.
    • மக்களை மையமாகக் கொண்ட ASEAN சமூகத்திற்கு விரிவான ஒரு பாதுகாப்பு வழங்குவதை உறுதி செய்வதற்கான வழிகள் பற்றி இந்த மன்றத்தில் விவாதிக்கப் பட்டது.
  • நடனக் கலையினை உலகளாவிய மதிப்பு கொண்டதாக மேம்படுத்துவதற்காக என்று ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 29 ஆம் தேதியன்று சர்வதேச நடன தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்