TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 1 , 2024 16 days 97 0
  • இந்திய அரசானது, UAE நாட்டின் அபுதாபியில் நடைபெற்ற உலக வர்த்தக அமைப்பின் 13வது அமைச்சர்கள் மாநாட்டில் (MC13) உலக வர்த்தக அமைப்பின் 164 உறுப்பினர் நாடுகளுடன் இணைந்து பங்கேற்றது.
  • SJVN லிமிடெட் நிறுவனமானது, இமாச்சலப் பிரதேசத்தின் ஜக்ரி எனுமிடத்தில் உள்ள அதன் 1,500 மெகாவாட் திறன் கொண்ட நாத்பா ஜாக்ரி நீர் மின் நிலையத்தில் (NJHPS) இந்தியாவின் முதல் பல்நோக்கு பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி நிலையத்தினைச் சோதனை முறையில் தொடங்கியுள்ளது.
  • கேரளாவில் அமைந்துள்ள அதானி குழுமத்தின் விழிஞ்சம் துறைமுகம் ஆனது இந்தியாவின் முதல் சரக்குப் பரிமாற்றத் துறைமுகமாகச் செயல்படுவதற்காக கப்பல் போக்குவரத்து அமைச்சகத்திடம் அனுமதி பெற்றுள்ளது.
  • இந்திய வரலாற்று ஆவணங்கள் ஆணையம் (IHRC) ஆனது, ஒரு புதிய முத்திரைச் சின்னம் மற்றும் முழக்கத்தினை ஏற்றுக் கொண்டுள்ளது.
    • ‘யத்ர இதிஹாஸம் பவிஷ்யம் ப்ரசக்சாந்தஹ்’ என்பது அதன் புதிய முழக்கம் ஆகும்.
  • மைக்ரோசாப்ட் நிறுவனமானது, அதன் ‘இலகுரக’ செயற்கை நுண்ணறிவு மாதிரியின் சமீபத்திய வடிவத்தினை பை-3-மினி வெளியிட்டுள்ளது.
    • இது மிகவும் திறன் மிக்க மற்றும் செலவு குறைந்த சிறிய மொழி மாதிரிகள் (SLMs) கிடைக்கப் பெறுகின்ற திறந்தநிலை மூலச் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளின் தொகுப்பாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்