TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 7 , 2024 13 days 86 0
  • சிவிங்கிப் புலி வளங்காப்புத் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்காக, கிழக்கு ஆப்பிரிக்க நாட்டிலிருந்து சிவிங்கிப் புலிகளை கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, கென்ய அதிகாரிகளின் தூதுக் குழுவை இந்தியா வரவேற்க உள்ளது.
    • மத்தியப் பிரதேசத்தில் உள்ள காந்தி சாகர் வனவிலங்கு சரணாலயம் ஆனது சிவிங்கிப் புலிகளை மறு அறிமுகப்படுத்துவதற்கான இரண்டாவது இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
  • பிரதீப் செபாஸ்டியன் எழுதிய 'The Book Beautiful' என்ற புத்தகத்திற்கான அட்டைப் பட வடிவமைப்பிற்காக பவி மேத்தா, 9வது ஆக்ஸ்போர்டு புக்ஸ்டோர் புத்தக அட்டைப் பட பரிசை (2024) வென்றுள்ளார்.
  • சமீபத்தில், ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் முகமையின் அரசுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தைக் குழுவின் (INC-4) நான்காவது அமர்வானது கனடாவின் ஒட்டாவா நகரில் நடைபெற்றது.
  • ஆண்டுதோறும் மே 05 ஆம் தேதியானது ஆப்பிரிக்க உலகப் பாரம்பரியத் தினமாக அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்